இன்று முதல் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. 


கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், மெரினா கடற்கரை ஓரத்தில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. அதன் பின்பு, அந்த இடத்தில் நினைவிடம் கட்ட தமிழக அரசு ஏற்பாடு செய்ததது. இந்த நினைவிடம் மற்றும் அதனைச் சார்ந்த கட்டமைப்புகள், 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில், ரூ.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடத்தில் தமிழக அரசின் பொதுப்பணித் துறை திட்ட நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவினர் இரண்டரை ஆண்டுகளில் கட்டுமான  பணிகளை முடித்து கொடுத்துள்ளனர்.


நினைவிடத்தில்  'மக்களால் நான்; மக்களுக்காக நான், அமைதி, வளம், வளர்ச்சி' ஆகிய, ஜெயலலிதாவின் பொன்மொழிகள் பொறிக்கப்பட்டுள்ளன. 

இதனை தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியும் மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கடந்த ஜனவரி 27-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. பின்னர் கட்டுமான பராமரிப்பு பணிகள் முடியும் வரை மூடப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.