தமிழகம் போலவே கேரளவிலும் 140 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று நடக்கிறது. முதல்வர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ரகுநாத் போட்டியிடுகிறார்.


வாக்களித்த பின்பு செய்தியாளர்களிடம் கூறியது, ‘’ இடதுசாரிகளுடன் துணையாக இருக்கும் மக்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி வரலாற்று வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என நம்புகிறேன்.  எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது என்பதை மக்கள் உள்ளாட்சித் தேர்தலின்போது மாபெரும் வெற்றியளித்து நிரூபித்துவிட்டார்கள். இது நிச்சயம் சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும். 


ஐயப்ப பக்தர்களும் இடதுசாரிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். சபரி மலை கோவில் விவகாரத்தை வைத்து அரசியல் செய்த பாஜகவிற்கு இந்த முறை கேரளாவில் ஒரு இடம் கூட கிடைக்காது.

கேரளாவில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்கள், வெள்ளம், மழை, தொற்றுநோய் போன்ற காலங்களில் நாங்கள் செய்த சேவைகள், திட்டங்கள் மக்கள் நிச்சயம் எங்களுடன் இருப்பார்கள்.”என்றார்.