தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. 

கொரோனா பரவல் இரண்டாம் அலையை நோக்கி சென்றதற்கு, தேர்தல் நேரத்தில் அரசியல் கூட்டங்கள், பேரணிகள், பரப்புரைகள் மேற்கொள்ள அனுமதி அளித்த தேர்தல் ஆணையமே காரணம் என்று சுட்டிக்காட்டியது நீதிமன்றம். 


இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை நாளில் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. 


அதன்படி வாக்கு எண்ணிக்கை நாளன்று, கட்சிகள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள், அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.