கிராமப்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு  அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டிதரும் மற்றும் நகர்ப்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு அரசே நிலம் வாங்கி அடுக்குமாடியில் குடியிருப்புக்கள் விலையில்லாமல் வழங்கப்படும். 


குல விளக்கு திட்டம் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 1,500 ரூபாய் குடும்பத்தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில்  செலுத்தப்படும். பெண்கள் இல்லாத வீடுகளில் ஆண்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். 


நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு, 50 % கட்டணச் சலுகை வழங்கப்படும். பொதுவிநியோக திட்டத்தின் கீழ், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே நேரடியாக வழங்கப்படும்.


அனைத்து குடும்பத்திற்கு வருடத்திற்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். அனைத்து ரேஷன் அட்டைதாரகளுக்கும் சோலார் சமையல் அடுப்பு,  அம்மா வாசிங் மெஷின் விலையில்லாமல் வழங்கப்படும்.


விவசாயிகளை ஊக்குவிக்கவும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 7,500 ரூபாய் உழவு மானியம் வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்கடன், நகைக்கடன் தள்ளுபடியைத் தொடர்ந்து, மாணவர் நலன் காக்க மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.

 மஞ்சள், வெங்காயம், மரவள்ளிக்கிழங்கு, அரிசி, கரும்பு, வாழை, சிறுதானியங்கள் உள்ளிட்ட முக்கிய விளைபொருட்களுக்கு குறைந்தப்பட்ட ஆதார விலை MSP  தமிழக அரசால் வழங்கப்படும்.” உள்ளிட்ட பல அறிவிப்புகள் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இருக்கிறது.