புகார் கொடுத்த வந்த பெண்ணிடம் ஆசைக்கு இணங்குமாறு போலீஸ் அதிகாரி ஒருவர் வலியுறுத்திய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியில் காவல் சிறப்பு பிரிவின் அதிகாரியாக போலீஸ் உதவி கமிஷனர் கைலாஷ் போஹ்ரா என்ற உயர் அதிகாரி நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

அப்போது, குடும்ப பிரச்சனை காரணமாகப் பாதிக்கப்பட்டு இருந்த இளம் பெண் ஒருவர், பிரச்சனை தொடர்பாக புகார் கொடுக்க வந்தார். அதன் படி, சிறப்பு பிரிவின் அதிகாரியான போலீஸ் உதவி கமிஷனர் கைலாஷ் போஹ்ராவை நேரில் சந்தித்த, பாதிக்கப்பட்ட அந்த பெண் புகார் அளித்தார்.

ஆனால், இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், விசாரணை நடத்தாமலும், அந்த போலீஸ் அதிகாரி காலம் தாழ்த்தி வந்தார் என்று, கூறப்படுகிறது. 

இப்படியாக புகார் கொடுத்தும் பல நாட்கள் ஆன நிலையில், எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அந்த போலீஸ் அதிகாரி காலம் தாழ்த்தி வந்திருக்கிறார்.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண், சம்மந்தப்பட்ட அதிகாரியை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டு உள்ளார். அப்போது, “உங்களுக்கு ஆதரவாக நான் விசாரணை நடத்த வேண்டும் என்றால், எனக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்” என்று, போலீஸ் அதிகாரி கைலாஷ் கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது.

ஆனால், “என்னிடம் அவ்வளவு பணம் இல்லை” என்று, அந்த பெண் பதில் அளித்ததாகத் தெரிகிறது. 

அதன் தொடர்ச்சியாக, அந்த பெண்ணிடம் “அப்படியென்றால், என் ஆசைக்கு இணங்க வேண்டும்” என்று கூறி, அந்த பெண்ணை வற்புறுத்தியதாகத் தெரிகிறது.

அத்துடன், இதற்காக அந்த பெண்ணை தன்னுடைய வீட்டிற்கு வரும்படி அந்த போலீஸ் அதிகாரி அழைத்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இது தொடர்பாக அங்குள்ள ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் டிஜிபி யிடம், புகார் அளித்தார். அதன் தொடர்ச்சியாக, ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் டிஜிபியின் பரிந்துரையின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், உதவி கமிஷனர் கைலாஷ் போஹ்ராவை அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, ராஜஸ்தானில் புகார் கொடுத்த வந்த பெண்ணிடம் ஆசைக்கு இணங்குமாறு போலீஸ் அதிகாரி ஒருவர் வலியுறுத்திய சம்பவம், அந்த மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.