அழகு குறிப்பில் பெண்களின் சரும பிரச்சனைகளை ஆண்களின் சரும பிரச்சனையோடு ஒப்பிட்டுவது உண்டு. இதனால் பெண்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களும் பயன்படுத்த பரிந்துரை செய்யப்படும். பெண்களை காட்டிலும் ஆண்களின் உடல் அதிக எண்ணெய்பசை கொண்டிருக்கும். ஆனால் ஆண்கள் முகத்தில் எண்ணெய் சுரப்பிகள் குறைவாக தான் இருக்கும். 


அதனால் பெண்களுக்கு பரிந்துரைக்கும் லோசன்கள், க்ரீம் எதுவும் ஆண்களுக்கு பொருந்தாது.   ஆண்கள் முகத்துக்கு பயன்படுத்தும் போது ஆயில் ஃப்ரீ க்ரீம் வகைகளை தேர்வு செய்வதன் மூலம் சரும திட்டுக்களை குறைக்கலாம். உடலுக்கு மெல்லிய லோஷன்களை விட அடர்த்தியான  லோஷன்களை தேர்வு செய்யலாம். 


அதே நேரம், பெண்களுக்காக பயன்படுத்தப்படும் மாய்சுரைஸர் ஆண்கள் பயன்படுத்தகூடாது என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் சருமத்துக்கு ஈரப்பதம் அளிக்கவும், பராமரிக்கவும் தயாரிக்கப்படும் க்ரீம் வகைகள் ஒரே மாதிரியாகத்தான் தயாரிக்கப்படுகின்றது. அதனால் மாய்சுரைஸர் மட்டும் பெண்களுக்கானது ஆண்களுக்கானது என்று தனித்தனியாக இல்லை. 
ஆண்களின் சருமம் தடினமானது அதனால்  சன்ஸ்க்ரீன்  அவசியம் இல்லை என்ற கருத்து உண்டு. ஆண், பெண் யாராக இருந்தாலும்  சூரிய வெளிச்சத்தில் 10 நிமிடங்கள் இருந்தாலே சன்ஸ்க்ரீன் அவசியம். சருமத்தின் பி. ஹெச் அளவை பராமரிக்க சன்ஸ்க்ரீன்  அவசியம் பயன்படுத்த வேண்டும். 


ஒவ்வொரு முறை ஷேவிங் செய்த பிறகும் மாய்சுரைசர் பயன்படுத்துவதும் மிகவும் அவசியம். சருமத்தில் இருக்கும்  துளைகளுக்குள் இருக்கும் அழுக்கையும் சுத்தம் செய்து சருமத்தை பளிச்சென்று வைத்திருக்க இது உதவும்.


பெண்கள் பயன்படுத்தும் லிப்பாம் பயன்படுத்துவதால் உதடுகள் உலரும் என்று சொல்லப்படுகிறது. இதுவும் தவறு. வறட்சியான உதடுகளை ஈரப்பதமாக வைத்திருக்க லிப் பாம் அவசியம். புகைப்பிடிக்கும் பழக்கத்தை இருந்தால், அதனால் ஏற்படும் உதடு வறட்சியை குறைக்க நிச்சயம் கலர்லெஸ் லிப்பாம் பயன்படுத்தலாம்.