காதலருடன் தொடர்ந்து பேசுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்ததால், விஷப்பாம்பை பயன்படுத்தி மாமியாரைக் கொன்ற மருமகளுக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்து உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜுன் ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்த அல்பனா என்ற இளம் பெண்ணுக்கும், ராணுவத்தில் பணி புரியும் சச்சின் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு இரு வீட்டார் முறைப்படி திருமணம் நடந்து உள்ளது. 

இவர்களது திருமணத்துக்குப் பிறகு கணவன் சச்சின் வேலைக்கு சென்று உள்ளார். அத்துடன், வீட்டில் இருந்த மாமனாருக்கும் வேலைக்காக, வெளியூர் சென்று விட்டார். இதனால், வீட்டில் மாமியார் சுபோத் தேவியும், மருகள் அல்பனாவும் மட்டுமே இருந்து உள்ளனர்.

அப்போது, மருமகள் அல்பனா, தனது முன்னாள் காதலர் மணீஷ் என்ற இளைஞனுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்திருக்கிறார்.

இப்படியாக, மருமகள் செல்போனில் அடிக்கடி போனில் அரட்டை அடித்து வந்ததால், இதை பார்த்த மாமியார் தனது மருமகளை கண்டுபிடித்து உள்ளார். இதன் காரணமாக, அவர்களுக்குள் கடும் வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில், மாமியாரை கொன்றுவிட வேண்டும் என்று, மருமகள் அல்பனா முடிவு செய்திருக்கிறார். 

இது தொடர்பாக தனது பழைய காதலன் மணீஷுடன் அவர் ஆலோசித்து வந்திருக்கிறார். அதன்படி, அவர்  பாம்பு விட்டு கொல்லும் புதி ஐடியாவை அவர் கூறியிருக்கிறார்.

“பாம்பு பிடிப்பவரிடம் சொல்லி, விஷப்பாம்பை வாங்கி வந்து மாமியாரின் பெட் ரூமில் வைத்துவிட்டால், பாம்பு கடித்து அவர் இறந்த பிறகு அதை அப்படியே சொல்லி தப்பித்து விடலாம்” என்றும் அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். 

இப்படி திட்டத்தின்படியே அவர்கள் செயல்பட்டு பாம்பை வாங்கி மாமியாரின் பெட்ரூமில் மறுநாள் விட்டிருக்கிறார். அதன் படியே, அடுத்த நாள் காலையில் அவர் பாம்பு கடித்து உயிரிழந்திருக்கிறார். அந்தப் பகுதியில் பாம்பு கடித்து உயிரிழப்பது சகஜம் என்பதால், உறவினர்களும் அக்கம் பக்கத்தினரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இதனையடுத்து, மாமியார் இறந்து அடுத்த ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மருமகள் அல்பனா மீது உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்து உள்ளது. இனதால், இது குறித்து அவர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அல்பனாவின் செல்போனை பரிசோதித்தனர். 

அப்போது, அவரது மாமியார் உயிரிழந்த நாளன்று ஒரே நம்பருக்கு அந்த மருமகள் கிட்டதட்ட 100 முறை போன் பேசியிருந்தது தெரிய வநதது. 

இது குறித்து அல்பனாவிடம் போலீசார் விசாரித்த போது, “வேறு வழியில்லாமல் அவரது பழைய காதல் கதையும், விஷப்பாம்பால் மாமியாரைக் கொன்றக் கதையையும்” கூறியிருக்கிறார். 

இதனையடுத்து, அந்த பெண்ணின் காதலர், அவருக்கு உதவியவர் 3 பேர் என அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பத்தில், ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் அல்பனா மனு தாக்கல் செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இது குறித்து விசாரித்த நீதிமன்றம், “விஷப்பாம்பை பயன்படுத்தி மாமியாரை கொன்றிருப்பது கொடுமையானது” என்று கூறி, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.