காளியம்மன் கோயிலில் உள்ள அம்மன் சிலையின் மீது நல்ல பாம்பு அமர்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் ஈரோட்டில் தான் இப்படி ஒரு நிகழ்வு அரங்கேறி பக்தர்கள்  அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

கோயில்களில் உள்ள வேப்பமரத்தில் பால் வடிந்த சம்பவங்கள் தமிழகத்தில் நிறைய நடந்திருக்கின்றன. இதனைக் கண்டு பக்தர்கள் அதிசயித்திருக்கிறார்கள். 

இதனால், பால் வந்த வேப்பமரத்திற்கு மஞ்சள் துணி கட்டி, சூடம் ஏற்றிப் பல பக்தர்களும் தொடர்ச்சியாக வழிபாடு நடத்தியிருக்கிறார்கள். அப்படி, வேப்பமரத்தில் பால் வரும் சமயங்களில் பெண் பக்தர்கள் சிலருக்கு அருள் வந்து சாமியாடிய தருணங்களையும், நாம் கடந்த காலத்தில் பார்த்திருக்கிறோம்.

அத்துடன், தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள சில கோயில்களில், பாம்பு சில நேரங்களில் கோயிலுக்குள் வந்து சென்ற நிகழ்வுகளும் சில முறை நடந்திருக்கின்றன.

அந்த வகையில், ஈரோட்டில் உள்ள காளியம்மன் கோயிலில் உள்ள அம்மன் சிலையின் மீது நல்ல பாம்பு வந்து அமர்ந்துள்ள, தற்போது அந்த பகுதி பக்தர்களால்  ஆச்சரியத்தையும், பரவசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மாணிக்கம்பாளையத்தில் பகுதியில் காளியம்மன் கோயில் ஒன்று அமைந்து உள்ளது. 

இந்த காளியம்மன் கோயிலுக்கு, அந்த பகுதியில் உள்ள சுற்றுவட்டார மக்கள் ஏராளமானோர் தினமும் வந்து வழிபடுவது வழக்கம். 

இந்த நிலையில், நேற்று மாலை இந்த காளியம்மன் கோயிலுக்குள் திடீரென்று 5 அடி நீள முள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்து உள்ளது. 

கோயிலுக்குள் புகுந்த அந்த நல்ல பாம்பு, கோயிலில் உள்ள மூலவர் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் காளியம்மன் சிலை மீது ஏறி, அம்மன் கிரீடமான சிரசில் ஏறி
அமர்ந்து கொண்டது.

அப்போது, காளியம்மன் கோயிலுக்கு வந்த அந்த பகுதி பக்கதர்கள் இந்த அறியக் காட்சியைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போனார்கள். 

இதனையடுத்து, கோயிலில் இருந்த பக்தர்கள் பலரும், அம்மன் கிரீடமான சிரசில் ஏறி அமர்ந்த பாம்பை கண்டு, பய பக்தியுடன் வழிபட்டனர். 

அத்துடன், கோயில் பூசாரி அம்மன் சிலை மீது அமர்ந்திருந்த நல்ல பாம்பிற்குப் பூஜைகள் செய்து, கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினார். 

மேலும், காளியம்மன் கோயிலில் உள்ள அம்மன் சிலையின் மீது நல்ல பாம்பு அமர்ந்த செய்தி, அந்த பகுதி முழுவதும் பரவியதால், படமெடுத்து ஆடும் நல்ல பாம்பைக் காண காண கோவில் முன்பு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால், அந்த கோயில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதே நேரத்தில், காளியம்மன் கோயிலில் உள்ள அம்மன் சிலையின் மீது நல்ல பாம்பு அமர்ந்த சம்பவம், அப்பகுதியில் உள்ள காவல் துறையினருக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில், பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, அங்கு வந்த யுவராஜ், அம்மன் சிரசில் அமர்ந்திருந்த நல்ல பாம்பை லாவகமாகப் பிடித்து, சாக்கு பையில் போட்டார். அதன் பிறகு, அந்த பாம்பு அருகில் உள்ள வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது.

இதனிடையே, காளியம்மன் கோயிலில் உள்ள அம்மன் சிலையின் மீது நல்ல பாம்பு அமர்ந்திருந்ததை, அப்பகுதியைச் சேர்ந்த சில பக்தர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.