தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்த மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான அனேகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அமைரா டஸ்டர். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் நடிகை அமைரா, நடிகர் ஜாக்கிசான் நடித்து ஆக்ஷ்ன் அடவென்டசர் காமெடி திரைப்படமாக வெளிவந்த குங் ஃபூ யோகா திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை அமைரா தமிழில் நடித்துள்ள திரைப்படம் பஹீரா. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பஹீரா திரைப்படத்தில் நடிகை அமைரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அமைரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படத்தை நடிகை அமைரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களை கிறங்கடிக்கும் அந்த புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்.