ஃபேஸ்புக் காதலனை நம்பி சென்ற இளம் பெண்ணை, 25 பேர் கொண்ட கொடூர கும்பல் ஒன்று, வெறித் தீர பாலியல் பலாத்காரம் செய்த உச்ச கட்ட கொடூரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த உச்சக்கட்ட கொடூரமானது, தலைநகர் டெல்லியில் தான் அரங்கேறி இருக்கிறது. 

தலைநகர் டெல்லியில் 21 வயதான இளம் பெண் ஒருவர், அங்குள்ள ஒரு வீட்டில் பணிப் பெண்ணாக பணியாற்றி வந்தார். இந்த இளம் பெண், குறிப்பிட்ட ஒரே வீட்டில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்திருக்கிறார். 

இதனால், வேலை நேரம் போக மற்ற நேரங்களில் அந்த பணிப் பெண், எந்நேரமும் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக்கிடந்து உள்ளார். குறிப்பாக, ஃபேஸ்புக்கில் தான், அதிக நேரம் அந்த இளம் பெண் நேரத்தைப் போக்கி வந்திருக்கிறார்.

அப்போது, அந்த இளம் பெண்ணுக்கு ஃபேஸ்புக்கில் 25 வயதான சாகர் என்ற இளைஞர் அறிமுகம் ஆகி உள்ளார். தொடக்கத்தில், இவர்கள் இருவரும் நட்பாக பேசி வந்தனர். இந்த தொடர்ச்சியான பேச்சு, மற்றும் சாட்டிங்கானது அவர்களுக்குள் காதலை வளர்த்து உள்ளது. இதனால், அந்த இளைஞர் விரித்த காதல் வலையில் அந்த பெண் விழுந்து உள்ளார்.

இதனால், 21 வயதான அந்த பணி பெண், அந்த 25 வயதான இளைஞரை காதலிக்கத் தொடங்கி உள்ளார். இவர்களது நட்பு காதலாக மாறிய நிலையில், “நாம் திருமணம் செய்துகொள்ளலாமா? என்று, அந்த பெண்ணிடம் சாகர் கேட்டு உள்ளார். அதற்கு, அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து உள்ளார்.

அப்போது, இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்த இளைஞர் சாகர், “என்னுடைய பெற்றோரைச் சந்திக்க வருமாறு” கூறி, ஒரு ஹோட்டலுக்கு அந்த பெண்ணை வர சொல்லியிருக்கிறார்.

அதனை நம்பிய அந்த இளம் பெண், கடந்த 3 ஆம் தேதி சாகர் சொன்னபடி குறிப்பிட்ட அந்த ஹோட்டலுக்கு வந்துள்ளார். அப்போது, அங்கு காரில் வந்த ஃபேஸ்புக் காதலன் சாகர், “வீட்டிற்கு செல்வதாகக் கூறிவிட்டு” அந்த பெண்ணை தன்னுடைய காரில் அழைத்துக்கொண்டு, சென்று உள்ளார். 

அப்போது, அவரின் கார், அங்குள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ள ஒரு காட்டுப் பகுதிக்கு சென்று உள்ளது. ஆனால், அந்த காட்டுப் பகுதியில் ஏற்கனவே சாகரின் நண்பர்கள் 24 பேர் அங்கு பதுங்கி இருந்து உள்ளனர். 

அப்போது, அந்த காட்டுப் பகுதியில் காரை நிறுத்திய சாகர், அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்து உள்ளார். அந்த நேரம் பார்த்து, சாகரின் நண்பர்கள் முதலில் 5 பேர் மட்டும் வந்திருக்கிறார்கள். அப்போது, சாகர் உட்பட அவர்கள் 6 பேருமாக சேர்ந்து, அந்த 21 வயது இளம் பெண்ணை வெறித் தீர மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். 

அதன் தொடர்ச்சியாக, ஃபேஸ் காதலன் சாகர், தனது காதலியை, அந்த காட்டுக்குள் பதுங்கி இருந்து மேலும் 20 பேர்களுக்கு விருந்தாக்கி உள்ளார். இதனையடுத்து, அந்த 25 பேரும் அந்த பெண்ணை வெறித் தீர பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்று உள்ளனர்.

இதனையடுத்து, எழுந்து நடக்க முடியாமல் எப்படியோ மெயின் ரோட்டிற்கு வந்த அந்த பெண், அந்த வழியாக சென்றவர்களின் உதவியுடன், அங்குள்ள காவல் நிலையம் சென்று, புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஃபேஸ்புக் காதலன் சாகர் மற்றும் அவனின் நண்பர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.