இளம் பெண்ணை காதலித்து அவரை மற்றொருவருக்கு 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்று விட்டு காதலன் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் சிகரில் இருக்கும் கோபால் லால் என்பவர், சிக்கரில் வசிக்கும் ஒரு மைனர் இளம் பெண்ணை, தனது மைத்துனர் டான்வீருக்கு திருமணம் செய்து வைக்க விரும்பி உள்ளார்.

இதனால், அவர் நீரஜ் என்ற இளைஞரை சந்தித்து குறிப்பிட்ட “அந்த மைனர் பெண்ணை என்னிடம் ஒப்படைத்தால் நான் பணம் தருகிறேன்” என்றும், கூறி இருக்கிறார்.

இதனால், இளைஞர் நீரஜ் அந்த மைனர் பெண்ணை அடிக்கடி தொடர்பு கொண்டு அவரது மனதில் காதலை வளர்த்திருக்கிறார். இப்படியாக, இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். 

அதன் பிறகு அந்த பெண்ணை நேரில் சந்திப்பதற்காக, அங்குள்ள ஒரு இடத்திற்கு வரவைத்திருக்கிறார்.

அதன் பிறகு அந்த இளைஞர் நீரஜ், ரோகிணியைச் சேர்ந்த முஸ்கான் என்பவருடன் சேர்ந்து கொண்டு அந்த மைனர் பெண்ணை ஆக்ராவில் உள்ள அவரின் கூட்டாளியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.

அதன் பிறகு, ஆக்ராவில் உள்ள கூட்டாளியின் உதவியுடன், அந்த பெண்ணுடன் சேர்ந்து அவர்கள் அங்கிருந்து பயணப்பட்ட நிலையில், அந்த பெண்ணை சிக்கரில் வசிக்கும் கோபால் லால் என்பவருக்கு 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டு, அந்த பணத்தை பெற்றுக்கொண்டு, அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளார்.

அதன் பிறகு, இந்த வருமானத்தில் 30 ஆயிரம் ரூபாய் நீரஜுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், இளம் பெண்ணை காணவில்லை என்று, அவரது பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு அந்த கூட்டத்தை அதிரடியாக கைது செய்தனர். பின்னர், அவரிடம் இருந்த பணத்தை மீட்ட போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.