தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் தளபதி விஜய். அடுத்ததாக இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் தயாரிப்பில் உருவாகும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பிரம்மாண்டமாக தயாராகி வரும் பீஸ்ட் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய R.நிர்மல் படத்தொகுப்பு செய்கிறார். ராக்ஸ்டார் அனிருத் இசை அமைக்கிறார். முழுவீச்சில் விறுவிறுப்பாக பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க, இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அபர்ணா தாஸ், யோகிபாபு, ஜான் விஜய், சைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், சதீஷ், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை அபர்ணா தாஸ் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன. பிகினி உடையில் அபர்ணா தாஸ் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அந்தப் புகைப்படங்கள் இதோ...