திருமணமாகி 45 ஆண்டுகள் ஆன பிறகு, கிட்டதட்ட 70 வயதான பாட்டிக்கு இந்த வயதான நிலையிலும் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் தான் இப்படி ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் மோடா கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதிகளான 70 வயதான ஜிவுன்பென் ரபாரி என்ற பெண்ணும், 75 வயதான வல்ஜிபாய் ரபாரி என்ற ஆணும் தம்பதிகளாக வசித்து வருகின்றனர். 

அத்துடன், இந்த தம்பதிக்கு திருமணமாகி கிட்டதட்ட 45 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை குழந்தை பிறக்கவே இல்லை. இதனால், இந்த தம்பதி, அங்குள்ள மருத்துவமனையில் பல்வேறு முறை சிகிச்சை பெற்று வந்த நிலையில், இது தொடர்பான பல விதமான உணவுகளை உட்கொண்டு வந்தனர்.

மேலும், தங்களது உறவினர்கள் மூலம் ஐவிஎப் எனும் நவீன செயல் முறை பற்றி அறிந்துகொண்ட பிறகு, வயதான பிறகும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு, இந்த வயதான காலத்திலும் அந்த வயதான தம்பதிகள் இருவரும், அங்குள்ள ஐவிஎப் மையத்தை நடத்தி வரும் டாக்டர் நரேஷ் பானுஷாலியை சந்தித்து, தங்களது விருப்பத்தைக் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தான், விட்ரோ கருத்தரித்தல் என்னும் ஐவிஎப் மூலமாக அந்த 70 வயதான மூதாட்டி, தற்போது ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து உள்ளார். 

குறிப்பாக, 70 மற்றும் 75 வயதான தம்பதிகள் இந்த வயதான காலத்திலும் தங்களது முதுமையைத் துளியும் பொருட்படுத்தாமல், குழந்தையைப் பெற்றெடுத்து உள்ளதற்கு, பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முக்கியமாக, புதிதாகப் பெற்றெடுத்த குழந்தையுடன் அந்த வயதான தம்பதிகள் இருக்கும் புகைப்படம் ஒன்றும், இணையத்தில் பதிவிடப்பட்டு தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.

அதே போல், இதற்கு முன்னதாக இதே போன்று, கடந்த 2019 ஆம் ஆண்டில் ஆந்திராவைச் சேர்ந்த 74 வயதான மங்கையம்மா என்ற பெண்,  ஒரு நன்கொடையாளரின் உதவியுடன் ஐவிஎப் சிகிச்சைக்கு பின்னர் இரட்டை பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தது பற்றி நாடு முழுவதும் வைரலானது குறிப்பிடத்தக்கது.