ஒரு வீட்டினுள் புகுந்த 5 பேர் கொண்ட கும்பல், அந்த வீட்டில் இருந்தவர்களை கட்டி போட்டுவிட்டு அவர்களது 16 வயதான மகளை 5 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு உச்ச கட்டமான கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்திற்கு பிறகு, இந்தியாவின் மற்ற மாநிலங்களை விடவும், வட மாநிலங்களில் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாகவே, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூரில் மற்றொரு பயங்கரமான சம்பவம் தற்போது அரங்கேறி அனைத்து தரப்பு மக்களையும் கடும் பீதிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தின் உள்ள ஒரு கிராமத்தில், 16 வயதான மைனர் பெண், தனது பெற்றோர் மற்றும் சகோதரனுடன் வசித்து வந்தார். இந்த மைனர் பெண், அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.

இந்த 16 வயதான சிறுமி, அந்த பகுதியில் பள்ளிக்கூடம் சென்று வரும்போது, அவரை இரவு நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என்று, அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் திட்டமிட்டு உள்ளனர்.

அதன்படி, கடந்த 17 ஆம் தேதி இரவு அதே ஊரை சேர்ந்த 5 பேர் கொண்ட ஒரு இளைஞர் கூட்டம், திட்டம் போட்டு அன்றைய இரவு நேரத்தில், அந்த 16 வயது இளம் பெண்ணின் வீட்டினுள் அத்து மீறி நுழைந்து உள்ளனர்.

அந்த வீட்டினுள் நுழைந்த அந்த கும்பல், முதலில் அந்த வீட்டிலிருந்த அந்த பெண்னின் தந்தை மற்றும் சகோதரன் இருவரையும் மிக கடுமையாக தாக்கி, வீட்டினுள் உள்ள ஒரு தூணில் கட்டி போட்டு உள்ளனர். 

இதனையடுத்து, அந்த 16 வயது சிறுமியை, அந்த 5 பேர் கொண்ட கும்பல் வெறியாட்டம் ஆடி, மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். 

இதனையடுத்து, அந்த பெண்ணையும் அவரது குடும்பத்தையும் மிரட்டும் விதமாக, அந்த பெண்ணின் வயலுக்கு தீ வைத்து கொளுத்தி விட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் வீட்டில் அருகில் உள்ளவர்கள் அங்குள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். அவருக்கு, அங்கு பல்வேறு விதமான பரிசோதனைகள் மேற்படுத்தப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக வீசி தேடி வருகின்றனர். இச்சம்வம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.