திருமணம் செய்து வைக்குமாறு தொடர்ச்சியாக டார்ச்சர் செய்த மகனை, பெற்ற தாயே கொலை செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

தெலங்கானா மாநிலம் புலமடி கிராமத்தைச் சேர்ந்த மச்சேந்தர் - லஷ்மம்மா தம்பதிக்கு மொத்தம் 4 மகன்கள் உள்ளனர். இதில், 3 வது மகனான சிவபிரசாத், மதுவுக்கு அடிமையாக உள்ளார். இதனால், எந்நேரமும் அவர் குடிப்பழக்கத்திலேயே இருந்துள்ளார்.

பெரும்பலம் மது அருந்திவிட்டு தனது தாயர் லஷ்மம்மாவிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை தந்து வந்ததுள்ளார்.

அத்துடன், சமீப காலமாக தனக்கு உடனடியாக திருமணம் செய்து வைக்கும் படியும் தனது தாயாரிடம் அவர் அடிக்கடி சண்டைபோட்டு வந்துள்ளதாகக்  கூறப்படுகிறது. இதனால், கடும் எரிச்சலும், ஆத்திரமும் அடைந்த தாயார் லஷ்மம்மா, அக்கம் பக்கத்தில் உள்ள தனது சொந்த பந்தங்களுடன் சேர்ந்து 3 வது மகன் சிவ பிரசாத்தை கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன் படியே, 3 வது மகன் சிவ பிரசாத், சம்பவத்தன்று, குடித்துவிட்டு, வழக்கம் போல் வீட்டிற்கு வந்து தனது தாயாரிடம் பணம் கேட்டு சண்டை போட்டதுடன், “எனக்கு இப்பவே கல்யாணம் செய்து வை” என்று, மீண்டும் சண்டை போட்டு உள்ளார். இதனால், கடும் ஆத்திரமடைந்த அவரது தயார், ஏற்கனவே திட்டமிட்டபடி, தனது சொந்த பந்தங்களுடன் சேர்ந்து, சிவ பிரசாத்தை கொலை செய்துள்ளனர்.

மகனை கொலை செய்து விட்டு, அங்குள்ள பிலாப்பூர் கிராமம் அருகே இருக்கும் தண்ணீர் இல்லாத கிணற்றில் குழி தோண்டி புதைத்துள்ளனர். 

அதன் பிறகு, டிசம்பர் 7 ஆம் தேதி லஷ்மம்மா, தனது மகனை காணவில்லை என்று, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த விசாரணையில், மகனின் தொல்லை தாங்க முடியாமல் அவரது தயார் லஷ்மம்மாவே, தனது சகோதரனுடன் சேர்ந்து கூலி ஆட்கள் மூலமாக வைத்து 
பணம் கொடுத்து கொலை செய்தது தெரிய வந்தது.

இதனால், மகனை கொலை செய்த தாயார் லஷ்மம்மா, அவரது தாய் புஷ்பம்மா, சகோதரர் பூபால் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், தாயார் புஷ்மம்மா, சகோதரர் பூபால் ஆகியோருடன் சதி திட்டம் தீட்டிய நிலையில், ஷமகன் சிவ பிரசாத்தை கொலை செய்ய அனந்தராமன் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய் பேரம் பேசி, முன் பணமாக 20 ஆயிரம் ரூபாய் கொடுத்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மகனின் செயலால் கடும் ஆத்திரமடைந்த தாய், கூலி ஆட்கள் மூலமாக ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி, பெற்ற மகனையே கொலை செய்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.