4 பேர் கொண்ட கும்பல், 17 வயது சிறுமியை மதுபானம் குடிக்க வைத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பூஜ் நகரில், பூஜியா என்ற பகுதியில் மலையடிவாரத்தில் பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த பண்ணைக்கு தனது நண்பருடன் 17 வயது சிறுமி ஒருவர் சென்று உள்ளார்.  

அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று, இந்த சிறுமியை அங்கிருந்து இழுத்துச் சென்று, ஆட்கள் நடமாட்டம் இல்லாத தனியான இடத்திற்கு சென்று கட்டாயப்படுத்தி மதுபானம் குடிக்க வைத்து உள்ளனர். 

இப்படியாக, கட்டாயப்படுத்தி அந்த சிறுமியின் மதுபானத்தை வாயில் ஏற்றிய நிலையில், அந்த சிறுமி கடும் போதையில் மயங்கியதாக தெரிகிறது.

இதனையடுத்து, அந்த 17 வயது சிறுமியை வெறிப்பிடித்த அந்த மனித மிருகங்கள், தங்களது பாலியல் இச்சைகள் தீரும் வரை அந்த சிறுமியை மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

இதனையடுத்து, அந்த வெறிப்பிடித்த 4 பேரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த பிறகு, பாலியல் இச்சகைள் எல்லாம் தீர்ந்து போன பிறகு, அந்த கும்பல் அந்த சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளது. 

இதனையடுத்து, அந்த வழியாக அந்த உள்ளூர் வாசிகள் இந்த சிறுமியை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்த உள்ளனர். அங்கு, அந்த சிறுமிக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனைடுத்து, மயக்கம் தெளிந்த நிலையில் அந்த சிறுமி கண் விழித்து பார்த்த போது, உள்ளூர்வாசிகள் உதவியுடன் தான் மீட்கப்பட்டு இந்த  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது தெரிய வந்தது. 

இதனையடுத்து, மருத்துவமனையின் சார்பில் அந்த பகுதியைச் சேர்ந்த போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தி புகாரை பெற்றுக்கொண்டனர்.

பின்னர், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் 4 பேரையும் திவிரமாக தேடி வந்த நிலையில், தற்போது சம்மந்தப்பட்ட 4 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

இந்த கூட்டுப் பாலியல் பலாத்காரம் பற்றி தெரிவித்த போலீசார், “பண்ணை பகுதிக்கு தனது நண்பருடன் சிறுமி சென்று உள்ளார், அப்போது அந்த பகுதியில் இருந்த 4 பேர், சிறுமியை தொடர்ந்து செனறு, அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி மதுபானம் குடிக்க வைத்து, அதன் பிறகே அவர்கள் சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்” என்றும், கூறியுள்ளார்.

“தற்போது, அவர்களில் ஒருவரை சிறுமிக்கு நினைவு உள்ளது என்றும், அதன் பின் மதுபானம் குடித்ததில் மயக்கமடைந்து உள்ளார்” என்றும், அந்த போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

“இந்த வழக்கில், 2 வது நபரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட உண்மையை ஒப்பு கொண்டு உள்ளார் என்றும், மற்ற 2 பேரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்பது பற்றி விபரங்கள், விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும், இது குறித்து மருத்துவ அறிக்கைகள் வெளி வந்த பிறகே இது குறித்த முழு விபரங்களும் தெரிய வரும்” என்றும், கூறியுள்ளார்.

குறிப்பாக, “இந்த வழக்கில் கடத்தல், நஞ்சு கொடுத்தல், பாலியல் பலாத்காரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ள” போலீசார், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 4 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர். 

மேலும், இந்த வழக்கு தொடர்பாக சம்மந்தப்பட்ட 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.