வானத்தில் வேகமாக பாய்ந்து வந்த ஒளி ஒன்று, பூமியில் விழுந்த அரிய காட்சி ஒன்று, இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தான், அந்த அரிய வகையான நிகழ்வு அங்குள்ள பெரும்பாலன மக்களால் நேரில் பார்க்கப்பட்டு இருக்கிறது. 
இவற்றுடன், மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இரவு நேரத்தில், வான் பகுதியில் இப்படி வேகமாக பூமியை நோக்கி வரும் அந்த ஒளி காணப்பட்டது.

அத்துடன், மஹாராஷ்டிரா மாநிலம் மட்டுமில்லாமல் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபுவா, பர்வானி மாவட்டங்களில் இருந்தும் அந்த அரிய வகையான நிகழ்வு வானத்தில் இருந்து ஒளி எழுப்பியபடி வேகமாக பறந்து வந்த அந்த காட்சியை, அந்த பகுதி மக்கள் பலரும் நேரில் பார்த்து உள்ளனர்.

அப்படியாக, “வானில் இருந்து பூமி நோக்கி வந்தது விண் கற்கல்” என்றே, கூறப்படுகிறது.

அதாவது, “விண்ணில் இருந்து பூமியின் மீது விழும் விண்கற்கள், அந்த பாய்ந்து வரும் இடைப்பட்ட பயணத்தில் இதுபோன்ற ஒரு பிரகாசமான கோடுகள் உருவாவது வழக்கமான ஒன்றுதான். மிகவும் அற்புதமான மற்றும் அரிய நிகழ்வாக பார்க்கப்படும் இந்த காட்சிகள், பெரும்பாலும் சாதரண மனிதனின் கேமராவில் சிக்குவது என்பது அரிதான விசயம் தான் என்றாலும், இந்த முறை விண்ணில் இருந்து பூமியை நோக்கிய வந்த இந்த அரிய நிகழ்வை பொது மக்கள் பலரும் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு உள்ளனர்.

குறிப்பாக, “ஷூட்டிங் ஸ்டார்ஸ்” என்று அழைக்கப்படும் இப்படியான விண் கற்கள், பாறை போன்ற பொருட்களாகும். 

இப்படியாக, பாறை போன்ற பொருட்களான இப்படியான விண் கற்கள், நமது பூமியின் வளிமண்டலத்தில் மிகப் பெரிய வேகத்தில் உள் நுழைகின்றன. 

அதாவது, விண்வெளி மண்டலத்தில் ஒரு தூசி நிறைந்த பகுதியைக் கடக்கும் போது, அதிவேகமாக வினாடிக்கு 30 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் உள் நுழைகின்றன. 

அப்படியான தருணத்தில், இந்த விண்கல் மழை என்று அழைக்கப்படும், ஒளிக் கோடுகளை மிகவும் பிரகாசமாக உருவாக்குகின்றன. 

இந்த காட்சிகள் தான், நேற்று இரவு நிகழ்ந்திருப்பதாகவும், அந்த காட்சிகள் யாவும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், விண்ணில் இருந்து பூமிக்கு நோக்க வந்த அந்த வெளிச்சமானது, வேற ஒரு நாட்டின் செயற்கைக்கோள் தற்செயலாக கீழே விழுந்திருக்கலாம் என்றும், அல்லது கீழ் நோக்கி வந்தது விண்கல் பொழிவோ அல்லது தீப்பந்தமாகவோ இருக்கலாம் என்றும், முக்கியமாக அது  ராக்கெட்டின் ஒரு பகுதியாக கூட இருக்கலாம்” என்று, கருத்துகளும், இணையத்தில் உலா வருவது குறிப்பிடத்தக்கது.