கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் மொத்த சவுத் இந்தியாவையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ராஷ்மிகா மந்தனா.இந்த படத்தில் இவரது அழகிற்க்கும்,நடிப்பிற்கும் மயங்கிய ரசிகர்கள் இவரை கனவுக்கன்னியாக ஏற்றுக்கொண்டனர்.சில மொழிகளில் இவர் நடிக்கவில்லை என்றாலும் இவருக்கான வரவேற்பு அங்கும் அதிகமாகவே இருந்தது.

இதனை தொடர்ந்து இவர் மீண்டும் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து டியர் காம்ரேட் படத்தில் கிரிக்கெட் விளையாடும் பெண்ணாக நடித்திருந்தார்.இந்த படத்தில் நடித்தற்காக பல விருதுகளை அள்ளிக்குவித்தார் ராஷ்மிகா.ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இந்த படம்.இந்த படத்தில் ராஷ்மிகாவின் நடிப்பு பலராலும் பாராட்ட பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் சுல்தான்,புஷ்பா உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.இதனை தவிர சில முக்கிய படங்களிலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா.மிஷன் மஜ்னு என்ற படத்தில் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் கால்பதிக்கிறார் ராஷ்மிகா.

இவர் ஹீரோயினாக நடித்த Aadavallu Meeku Joharlu என்ற தெலுங்கு படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இவர் நடிக்கும் புதிய பாலிவுட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது அர்ஜுன் ரெட்டி இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பிர் கபூர் நடிக்கவுள்ள அனிமல் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இதுகுறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by T-Series (@tseries.official)