“காதலனுடன் உல்லாசமாக வாழ எங்களுக்கு பணம் தேவைப்பட்டதால், என் கணவனையும் - என் மாமியாரையும் வெட்டி கொலை செய்தோம்” என்று, மனைவி ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், அந்த பகுதியில் விவசாயம் செய்து வந்திருந்தார்.

அத்துடன், செல்வராஜ் தனது மனைவி சுகாசினி மற்றும் தனது தாயாருடன் வசித்து வந்த நிலையில், நேற்று காலையில் செல்வராஜும், அவரது  தாயார் சௌந்திரம்மாளும் மிகவும் கொடூரமாரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்து உள்ளனர்.

இந்த கொடூரமான கொலை சம்பவம் குறித்து, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எரியோடு போலீஸார், இருவரின் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அதே நேரத்தில், இந்த இரட்டை கொலை குறித்து போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். 

அப்போது, இது தொடர்பான விசாரணையின் போத, செல்வராஜின் மனைவி சுகாசினி மீது போலீசாருக்கு சற்று சந்தேகம் வந்து உள்ளது.

இதனால், செல்வராஜின் மனைவி சுகாசினியை போலீசார் தங்களது பாணியில் தீவிரமாக விசாரணை நடத்தி உள்ளனர். 

இந்த விசாரணையில், செல்வராஜின் மனைவி சுகாசினி, தனது வீடு உள்ள அதே பகுதியைச் சேர்ந்த கோபி என்பவருடன் கள்ளக் காதல் உறவில்  இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. 

குறிப்பாக, இவர்களது கள்ளக் காதல் உறவுக்கும், இவர்கள் உல்லாசமாக சொகுசாக வாழ்வதற்கு பணம் தேவைப்பட்டு உள்ளது. ஆனால், வீட்டில் கணவனிடம் கேட்டு பணத்தை பெற முடியாமல் சுகாசினி தவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், “கணவன் செல்வராஜையும், மாமியாரையும் கொலை செய்து விட்டால், கணவனின் மொத்த சொத்தும் தனக்கு வந்துவிடும் என்றும், அதன் பிறகு மொத்த சொத்தையும் நாம் விற்றுவிடலாம் என்றும், அப்படி கிடைக்கும் பணத்தை வைத்து, சொகுசாக வாழலாம்” என்றும், சுகாசினி திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

அப்படி, “தனது கள்ளக் காதலன் உடன் சேர்ந்து திட்டம் போட்ட சுகாசினி, தனது கணவன் செல்வராஜையும், மாமியாரையும் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்தது” விசாரணையில் தெரிய வந்தது.

இதனிடையே, கள்ளக் காதலுடன் உல்லாசமாக வாழ்வதற்காக கணவனையும், மாமியாரையும் படுகொலை செய்த அந்த மனைவியின் செயல், வேடசந்தூர் பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பெரும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.