உத்தரப்பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்தில், 65 வயதான பாகிஸ்தானிய பெண் ஒருவர் கிராம பஞ்சாயத்தின் இடைக்காலத் தலைவராக இருந்து வந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 


கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின், உத்தரப்பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்திலுள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார் பானோ பேகம். அங்கேயே திருமணம் முடித்து , பலமுறை இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளார்.

மேலும் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை பெற்று இருக்கிறது. ஆனால் இந்திய குடியுரிமை பெறவில்லை.


இந்நிலையில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஷெஹ்னாஸ் பேகம் கடந்த ஜனவரியில்  மரணமடைந்தார். இதனால் கிராமக் குழுவின் பரிந்துரையின் பேரில் பானோ பேகம் அந்த கிராமப் பஞ்சாயத்தின் இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்றார்.

பானோ பேகம், பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று அதே கிராமத்தில் வசிக்கும் குவைதன் கான் என்றவர் புகார் அளித்து இருக்கிறார். அந்த புகாரில் பானோ பேகம் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்திய கிராம பஞ்சாயத்துத் தலைவர் பதவி வகிப்பது இந்திய சட்டத்துக்கு எதிரானது, அதை கவனிக்க தவறிய அதிகாரிக்கள் மீதும் , பானோ பேகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறப்பட்டு இருக்கிறது.