“ஏற்கனவே கல்யாணமான பெண்ணை தன்னை கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி” வற்புறுத்தி வந்த அந்த பெண்ணின் காதலன், சம்மந்தப்பட்ட பெண்ணின் நிர்வாண வீடியோவை அவரது கணவனுக்கு அனுப்பி வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் கோலார் நகரைச் சேர்ந்த 30 வயதான இளம் பெண் ஒருவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. 

திருமணத்திற்குப் பிறகு, அந்த பெண் தனது கணவருடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், வேலை விசயமாக சற்று தொலைதூர பகுதியில் பணியாற்றி வந்தார்.

இதனால், அலுவலகத்தில் அந்த பெண்ணிற்கு வீடியோ ஷேரிங் ஆப் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் படி, அந்த பெண் வீடியோ கால் பேசும் வசதியை பெற்றார். 

இப்படி, அந்த பெண் வீடியோ காலில் தனது கணவர் மற்றும் தனது குடும்பத்தினருடன் தொடர்ந்து பேசி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இந்த வீடியோ கால் மூலமாக, அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் நட்பாகப் பழகி வந்துள்ளார். 

அத்துடன், ஏற்கனவே கல்யாணமான இந்த பெண்ணுக்கு, வீடியோ காலில் அறிமுகம் ஆன புதிய நபர் மீது திடீரென்று காதல் மலர்ந்து உள்ளது. இதனால், தனது புதிய காதலனுடன், அந்த திருமணம் ஆன பெண் அதிகமாக வீடியோ காலில் பேசி பொழுதைப் போக்கி வந்தார்.

அதன் படி, திருமணம் ஆன அந்த பெண், தனது நிர்வாண வீடியோவை, தன்னுடைய புதிய காதலனுக்கு அனுப்பிவைத்து உள்ளார்.

அந்த பெண்ணின் நிர்வாண வீடியோவை பார்த்துச் சபலப்பட்ட அந்த காதலன், ஏற்கனவே திருமணம் ஆன அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார். 

இதனையடுத்து, தன்னுடைய திருமண ஆசையை, அந்த காதலன், அந்த பெண்ணிடம் வெளிப்படுத்தி உள்ளான்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், “நான் ஏற்கனவே திருமணம் செய்துகொண்டதால், என்னால் உன்னைத் திருமணம் செய்துகொள்ள முடியாது”  
என்று கூறி, மறுத்து விட்டார்.

இதனால், கோபமடைந்த அந்த காதலன், அந்த பெண் தனக்கு அனுப்பி வைத்த நிர்வாண வீடியோவை, அந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களுக்கு இவர் அனுப்பி வைத்து உள்ளார். 

அதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவன் மற்றும் அவர்களது உறவினர்கள், இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆபாசப் வீடியோவை அனுப்பிய நபரை அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், இவர்களது இந்த காதல் கதையும் வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாக பயன்படுத்தியதன் காரணமாக, அவர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.