தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற ஜூன் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில்  நேரடியாக வெளியாக உள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தை YNOT  ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் S.சசிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது.

நடிகர் தனுஷுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி,பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், கலையரசன் என பலர் நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்கு  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். கேங்ஸ்டர் திரைப்படங்களின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள கேங்ஸ்டர் திரைப்படமாக வெளிவர இருக்கும் ஜகமே தந்திரம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னதாக திரைப்படத்தின் டீஸர் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்ற நிலையில் வருகிற ஜூன் 18-ஆம் தேதி வெளிவரவுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்தின், டிரைலர் தற்போது வெளியாக உள்ள தகவல் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் எகிற வைத்திருக்கிறது. ஜூன் 1ஆம் தேதி ஜகமே தந்திரம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு திரைப்படத்திலிருந்து  நடிகர் தனுஷ் குரலில் வெளிவந்த ரகிட ரகிட பாடல் அனைவரையும் ஆட்டம் போட வைத்த நிலையில் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடுவதற்காக ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால் ஜகமே தந்திரம் படம் வருகிற ஜூன் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் நேரடியாக வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.