சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக மிகவும் பிரபலமடைந்த விஜே அஞ்சனா தொடர்ந்து பல தமிழ் தொலைகாட்சிகளில்  தொகுப்பாளராக பணிபுரிந்திருக்கிறார். கயல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அஞ்சனா. 

மகிழ்ச்சியான காதல் தம்பதிகளாக நல் வாழ்க்கை நடத்திவந்த இவர்களுக்கு தொல்லை செய்யும் விதமாக தற்போது ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் விஜே அஞ்சனாவிற்கு மர்ம நபர் ஒருவர்  சமூக வலைதள பக்கங்களில் வாயிலாக அருவருப்பான மெசேஜ்கள் அனுப்பி தொந்தரவு செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பிட்ட ஒரு தொலைபேசி எண்ணில் இருந்து தொடருந்து போன் செய்து அருவருக்கத்தக்க வகையில்  ஆபாசமாக பேசி  பாலியல் தொந்தரவு கொடுப்பதாக  புகார் தெரிவித்துள்ளார். 

மேலும் வழக்கம் போல இந்த நபரையும் அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் பிளாக் செய்தாலும் மீண்டும் மீண்டும் புதிய FAKE கணக்குகளில் வந்து தொல்லை கொடுப்பதாக தெரிவித்துள்ளார். தன் தொலைபேசி  எண் அவனுக்கு கிடைத்ததால் தொடர்ந்து தனக்கு போன் செய்து தொல்லை கொடுத்து வருவதால்  தற்போது புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுபோல தொந்தரவு செய்பவர்களை தடுத்து நிறுத்துவது எளிது தான் ஆனால் இது போன்ற சைக்கோக்களை என்ன செய்வது, இதே நபர் மற்ற பெண்களிடம் இதே வேலையை செய்தால் என்ன செய்வது?என ஆதங்கத்தோடு தெரிவித்துள்ளார். 

vj anjan receives abuse messages and call from anonymous pervert

முன்னதாக விஜே அஞ்சனாவின் கணவரான நடிகர் சந்திரன் இந்தப் பிரச்சினை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தொந்தரவு செய்யும் அந்த மர்ம நபரின் தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு தமிழக காவல்துறையின் உதவியை நாடியுள்ளார். இதுகுறித்து ஏபிஜே அஞ்சனா அவருக்கு ஆறுதல் கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தற்போது ஒரு பதிவிட்டுள்ளார்.