ஒரு தாயின் காதலனால், அடுத்தடுத்து 3 மகள்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், கொடூரத்தின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு உச்சக்கட்ட பாலியல் கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டத்தைச் சேர்ந்த அமுதா - சரவணன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு, 14 வயது, 12 வயது, மற்றும் 10 வயதுடைய 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த சிறுமிகளும், அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தனர்.

இப்படியான நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தொடர்ச்சியாக சண்டை வந்துகொண்டே இருந்து உள்ளது.

ஒரு கட்டத்தில் கணவன் - மனைவி இடையே கருத்துவேறுபாடு அதிகரித்து சண்டை முற்றிய நிலையில், கடும் கோபம் அடைந்த அவர் மனைவி, தன்னுடைய 3 மகள்களையும் அழைத்துக் கொண்டு, கணவனைப் பிரிந்து தனியாகச் சென்று விட்டார்.

தனியாகச் சென்ற அந்த தாய், பக்கத்து ஊரில் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து, தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது, அந்த தாய்க்கு, அந்த பகுதியைச் சேர்ந்த வேறு ஒருவரோடு கள்ளக் காதல் ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். ஒரு கட்டத்தில், அந்த பெண், தனது 3 பெண் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு கள்ளக் காதலனோடு சேர்ந்து தங்கி, அவருடன் குடும்பம் நடத்த ஆரம்பித்தார்.

அந்த நேரத்தில், தனது காதலியின் 3 பெண் பிள்ளைகள் மீதும், அந்த கள்ளக் காதலனுக்குச் சபலம் ஏற்பட்டு உள்ளது. இதனால், இந்த 3 சிறுமிகளையும் எப்படியும் பலாத்காரம் செய்துவிட வேண்டும் என்று, திட்டம் தீட்டி உள்ளான்.

அதன்படியே, தனது கள்ளக் காதலியின் 14 வயது, 12 வயது, மற்றும் 10 வயதுடைய 3 சிறுமிகளையும் வரிசையாக அடுத்தடுத்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான் அந்த வெறிபிடித்த காமுகன்.

உச்சக்கட்ட இந்த பாலியல் கொடூரம், கடந்த 3 ஆண்டுகாலமாக நடந்திருக்கிறது. அதாவது, கள்ளக் காதலியின் 3 மகள்களையும், அந்த காதலன் கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறான்.

ஒரு கட்டத்தில் அந்த வெறிபிடித்த காமுகனின் வெறியாட்டம் எல்லை மீறிப் போகவே, வலியைத் தாங்க முடியாத 3 சிறுமிகளும், தனது தாயாரிடம் அழுதுகொண்டே, தங்களுக்கும் நேரும் பாலியல் பலாத்கார கொடுமைகளைக் கூறி கதறி அழுதுள்ளார்.
 
இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த தாய், இது குறித்து தனது கள்ளக் காதலனிடம் நியாயம் கேட்டு உள்ளார். 

இதனால், கோபம் அடைந்த அந்த கள்ளக் காதலன், தாய் மற்றும் அவரது 3 மகளையும் அடித்துத் துன்புறுத்தி தனது வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.

இதனையடுத்து, 14 வயதுள்ள மூத்த மகள் மட்டும், அங்கிருந்து எப்படியோ தப்பிச் சென்று, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பகுதி போலீசார், இது குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அந்த வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தாயையும், அவரது மற்ற 2 பெண் பிள்ளைகளையும் பத்திரமாக மீட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, மீட்கப்பட்ட அந்த 4 பேரையும் அங்குள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் போலீசார் பத்திரமாகத் தங்க வைத்தனர். அங்கு, குழந்தைகள் நல அதிகாரிகளிடம், தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை அவர்கள் புகாராக அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து, அந்த கள்ளக் காதலனைக் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அந்த மாநிலம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.