தபால் வங்கி சேமிப்புக் கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத்தொகை 50 ரூபாயாக இருந்தது. இதனை மத்திய அரசு 500 ரூபாயாக உயா்த்த உத்தரவிட்டது. இதற்கான கால அவகாசம் டிசம்பர் 11 வரை வழங்கப்பட்டு இருக்கிறது. கிராமங்களில் பெரும்பாலானோர் வங்கிகளை விட தபால் நிலையங்களில் தான் பணத்தை சேமித்து வருகிறார்கள். 


கணக்கில் இருப்புத்தொகையைகாக 500 ரூபாய் இல்லாத பட்சத்தில் அபராதம் கட்டணமாக 100 ரூபாய் விதிக்கப்பட்டு என அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.  500 ரூபாய்க்கு கீழ் இருப்பு இருந்தால் அந்த கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாது.

தொடர்ச்சியாக மூன்று நிதியாண்டுகளுக்கு மேல் பண பரிமாற்றம் இல்லாமல் இருக்கும் கணக்குகளை மீண்டும் ஆக்டிவேட் செய்ய வேண்டும் தங்களது விவரங்களை கொடுத்து ஆக்டிவேட் செய்து வேண்டும். மார்ச் மாதம் முதல் கணக்கில் பணம் பூஜ்ஜியத்தில் இருந்தால் , கணக்கு காலாவதி என்று மூடப்படும். 


எனவே, தபால் அலுவலகங்களின் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவா்கள், சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை 500 ரூபாயை உயா்த்திக் கொள்ள வேண்டும்.


மேலும் 500 ரூபாய்க்கு கீழ் இருப்பு இருந்தால் அந்த கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாது. தொடர்ச்சியாக மூன்று நிதியாண்டுகளுக்கு மேல் பண பரிமாற்றம் இல்லாமல் இருக்கும் கணக்குகளை மீண்டும் ஆக்டிவேட் செய்ய வடிக்கியாளர்கள் தங்களது விவரங்களை மீண்டும் சமர்ப்பித்து ஆக்டிவேட் செய்து கொள்ள வேண்டும்.