ஏமாற்றி 2 வது திருமணம் செய்துகொண்ட மனைவியின் அந்தரங்க போட்டோக்களை, கோபத்தில் கணவன் இணையத்தில் வெளியிட்டதை, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள எம்.ஹெச்.பி. காலனி பகுதியைச் சேர்ந்த 24 வயதான சரவணன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது), அங்குள்ள ஒரு கூரியர் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்து வருகிறார்.

24 வயதான சரவணனுக்கு ஏற்கனவே கல்யாணமாகி மனைவி இருக்கும் நிலையில், தனது அலுவலகத்தில் வேலை கேட்டு வந்த ஒரு 21 வயதான இளம் பெண்ணின் அழகில் மயங்கி இருக்கிறார்.

இதனையடுத்து, வேலை கேட்டு விண்ணப்பித்திருந்த அந்த பெண்ணை, தனது நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்திய நிலையில், அந்த பெண்ணின் அழகில் அப்படியே மயங்கி கிடந்தார் என்றும் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, தனக்கு திருமணம் நடந்த விசயத்தை அவரிடமிருந்து முற்றிலுமாக மறைத்த சரவணன், அந்த இளம் பெண்ணை காதலித்து உள்ளார். இதற்கு, அந்த இளம் பெண்ணும் சம்மதம் தெரிவித்து உள்ளார்.

இருவரும் தொடர்ந்து காதலித்து வந்த நிலையில், கடந்த ஜீலை 27 ஆம் தேதி அங்குள்ள அமிர்தசரஸில் திருமணம் செய்து கொண்டனர். 

இதனையடுத்து, சரவணன் தனது 2 வது மனைவியுடன், கடந்த ஜீலை 30 ஆம் தேதி அங்குள்ள டோம்பிவிலியில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு தனது புது மனைவியுடன் குடும்பம் நடத்த தொடங்கினார்.

ஆனால், அடுத்த சில நாட்களில் தனது மனைவியை சரவணன், அடித்து கொடுமைப்படுத்தி நாள்தோறும் சித்திரவதை செய்யத் தொடங்கினார் என்றும் கூறப்படுகிறது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அங்குள்ள போரிவிலியில் இருக்கும் தனது அம்மா வீட்டிற்கு சென்று உள்ளார். 

அதே நேரத்தில், தனது கணவன் சரவணனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விசயமும் அவருக்குத் தெரிய வந்தது. இதனால், அவரை செல்போன் நம்பரை அந்த பெண் பிளாக் பண்ணி உள்ளார்.

இதனால், கடும் கோபம் அடைந்த சரவணன், அந்த பெண்ணை ஏற்கனவே தனது செல்போனில் எடுத்து வைத்திருந்த அந்தரங்க போட்டோக்களை, ஒரு போலியான இன்ஸ்டாக்ராம் பக்கத்தை உருவாக்கி, அதில் வெளியிட்டு உள்ளார். 

இணையத்தில் வெளியிடப்பட்ட இந்த போட்டோக்கள் அனைத்தும், அந்த இளம் பெண்ணின் உறவினர்களின் பார்வைக்குச் சென்று உள்ளது. இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு போன் செய்து, இந்த தகவலைக் கூறியுள்ளனர். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இது தொடர்பாக தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட கணவன் மீது, அங்குள்ள காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த நபரை அதிரடியாகக் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.