“முதலிரவு முடிந்த பிறகு தான் கணவனுக்கு வழுக்கை தலை இருப்பது தெரியும்” என்று, கணவன் மீது மனைவி அடுக்கடுக்கான புகார் அளித்தால், போலீசார் அதிர்ந்து போனார்கள். 

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தான், இப்படி ஒரு வினோத சம்பவம், புகாராக கிளம்பி இருக்கிறது. 

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மீரா சாலை பகுதியைச் சேர்ந்த 29 வயது சரவணன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்பவருக்கு, அவரது பெற்றோர் பல வருடங்களாகவே திருமணத்திற்கு வரன் தேடி உள்ளனர்.

நீண்ட வருடங்களாக பெண் தேடிய நிலையில், ஒரு வழியாக சரவணனுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்று ஒரு சில நாட்களே ஆன நிலையில், அவர் குடும்பத்தில் பிரச்சனை வெடித்துள்ளது.

அதாவது, கல்யாண பெண் திடீரென தனது கணவன் மீதும், அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதும் அங்குள்ள நயநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், “கடந்த செப்டம்பர் மாத்தில் தான் எனக்கு திருமணம் ஆனது என்றும், திருமணம் முடிந்த முதலிரவு அன்று என்னை பற்றிய எல்லா உண்மைகளையும், நான் என் கணவனிடம் சொன்னேன் என்றும், ஆனால் என் கணவர் அவரைப் பற்றி எதையும் என்னிடம் சொல்ல வில்லை” என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

குறிப்பாக, “எங்களுக்கு முதலிரவு முடிந்த பிறகு தான், என் கணவருக்குத் தலையில் வழுக்கை இருப்பது தெரியும் என்றும், கல்யாணம் மற்றும் முதலிரவின் போதும், என் கணவர் தலையில் விக் வைத்து அந்த வழுக்கைத் தலையை மறைத்து என்னை ஏமாற்றி விட்டார்” என்றும் கூறி உள்ளார்.

“நானும் இது தெரியாமலேயே அவருக்கு மனைவியாகி விட்டேன். என்னையே கொடுத்து விட்டேன். இப்படியே 2 மாசம் குடும்பமும் நான் நடத்தி விட்டேன். ஆனால், கணவனின் விக் விஷயம் எனக்கு இப்போது தான் தெரிய வந்தது” என்று தெரிவித்து உள்ளார்.

இதனால், “வழுக்கை இருப்பதை மறைத்து என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதால், அவர் மீதும் அவருடைய பெற்றோர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார். 

இந்த புகாரைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர். அத்துடன், இந்த புகார் பற்றிய செய்திகள் வெளியே கசிந்தன. இந்த வழக்கு, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்குள்ள நயா நகர் காவல் ஆய்வாளர் கைலாஷ் பிரேவ் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், “சம்பந்தப்பட்ட கல்யாண பெண்ணுக்கும், அவரது மாமியாருக்கும் பிரச்சினை இருந்து உள்ளது என்றும், வழுக்கை குறித்து தனக்குத் தெரிவிக்கவில்லை என்றும், வரதட்சணைக்காக மாமியார் தன்னை துன்புறுத்துவதாகவும் அந்த பெண் கூறி உள்ளார்” என்றும் குறிப்பிட்டார்.

“கணவனுக்கு மனைவி மீது சந்தேகம் இருந்திருக்கிறது. மனைவியின் செல்போனை ஹேக் செய்து சேட்டிங், வீடியோ கால், மெசேஜ்களை அடிக்கடி கண்காணித்து வருவதாகவும் புகாரில் அந்த பெண் குறிப்பிட்டு உள்ளார். இது தவிர, மனைவியுடன் வலுக்கட்டாயமாகக் கணவன் உடலுறவு வைத்து கொண்டார்” என்றும், பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்து உள்ளார் என்றும், அந்த அதிகாரி கூறினார்.

இதனையடுத்து, இந்த வழக்கில், கணவன் மற்றும் அவரது வீட்டார் சார்பில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால், அந்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனையடுத்து. அந்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.