கடந்த 10 ஆண்டுகளாக  தெற்கு கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது பத்தனம்புரம் பஞ்சாயத்து அலுவலகம். அந்த அலுவகலகத்தில் பகுதிநேர வேலையாக, மாதம் 2 ஆயிரம் சம்பளம் பெற்று வந்தவர், இன்று பஞ்சாயத்து தலைவர் நாற்காலியில் அமர்ந்து இருக்கிறார். 


அண்மையில் நடந்த முடிந்த கேரளா உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிட்ட ஆனந்தவள்ளி பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். பஞ்சாயத்து அலுவலகத்தில் பகுதிநேர துப்புரவாளராக இருந்து, தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேரளா பெண் ஆனந்தவள்ளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 


” எனது குடும்பமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் தான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே இதுப்போன்ற செயல்களைச் செய்ய முடியும். இந்த கட்சிக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். எனது தொகுதியில் உள்ள அனைவருக்கும் வாழ்க்கையை சிறப்பாக மாற்ற நான் கடுமையாக உழைப்பேன்” என்று ஆனந்தவள்ளி கூறுகிறார்.