மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, நாடு முழுவதும் போராட்டம், கண்டன ஆர்பாட்டம், எதிர்ப்பு குரல் வலுத்து வருகிறது. இந்நிலையில் வேளாண் சட்டங்கள் அமலானால் கேரள விவசாயிகளை அது பெரிய அளவில் பாதிக்கும். கேரளாவில் உணவுப் பஞ்சம் ஏற்படும் எனவும் கேரள முதல்வர் பிரனாயி விஜயன் குறிப்பிட்டு இருக்கிறார். 

மேலும் அவர், ‘’ விவசாயிகளின் போராட்டத்தை தடுத்து நிறுத்துவதை கைவிட்டுவிட்டு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். கேரளா மட்டுமில்லாது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளையும் இந்த சட்டம் பெரிதும் பாதிக்கும். இந்த சட்டங்கள் கார்ஃபரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது.

விவசாயிகளுக்கு நியாய விலை வழங்கும் உத்தரவாதத்திலிருந்து மத்திய அரசு தவறிவிட்டது என்று கூறி மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறவும் வலியுறுத்தி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.