18 ஆண்களை மயக்கி திருமணம் செய்து முதலிரவோடு ஓட்டம் பிடித்த மன்மத ராணியை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் தான் இப்படி ஒரு மன்மத ராணிகளின் வலையில் பல ஆண்கள் சிக்கித் தவித்து இருக்கிறார்கள்.

குஜராத் மாநிலம் ஜுனகத் பகுதியில் உள்ள அம்பலியா கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு சமீபத்தில் முறைப்படி திருமணம் நடைபெற்று உள்ளது.

ஆனால், திருமணம் முடிந்து முதல் நாள் இரவு நிகழ்வான முதலிரவு முடிந்த கையோடு, மறு நாள் காலையில் வீட்டில் இருந்த விலை உயர்ந்த தங்கம், வெள்ளி நகைகள், ஆபரணங்கள் மற்றும் வீட்டில் இருந்த பணத்தைத் திருடிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

வீட்டில் உள்ள மனைவியை காணவில்லை என்று, அந்த அப்பாவி கணவன் வீடு முழுவதும் முதலில் தேடிப் பார்த்து உள்ளனர். எங்குத் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து, அவருடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அதுவும் சுவிட்ச் ஆப் என்று வந்திருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக, வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவையும் மாயமானது தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த புது மாப்பிள்ளை, சற்று சந்தேகம் அடைந்து பெண் வீட்டாரைத் தொடர்புகொள்ள முயன்று உள்ளார். ஆனால், யாருடைய செல்போன் எண்ணும் உபயோகத்தில் இல்லை என்று வந்துள்ளது. இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த புதுமாப்பிள்ளை தான் ஏமாற்றப்பட்டதை நன்றாக உணர்ந்து, இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக மிக தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ஆண்களைத் திருமணம் செய்து ஏமாற்றும் திருட்டு கும்பலானது, அங்குள்ள ராஜ்கோட்டின் போபத்பாரா வட்டாரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. 

இதனையடுத்து, அந்தக் கும்பலிடம் திருமண வரன் பார்ப்பது போலவே காவல் துறையினர் மப்டியில் சந்திக்க முயன்றனர்.

அப்போது, போலீசார் எதிர்பார்த்த படியே, காவல் துறையின் பொறியில் அஞ்சலி என்ற இளம் பெண்ணும், அவரது தாயார் தனுபன் உட்பட 5 பேர் வசமாக சிக்கிக்கொண்டனர். 

இதனையடுத்து, அவர்கள் 5 பேரையும் அதிரடியாகக் கைது செய்த போலீசார், அவர்களிடம் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அப்போது, சம்மந்தப்பட்ட இளம் பெண் அஞ்சலி, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 18 பேரை இது வரை அவர் ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு, மறுநாளே நகைகள் மற்றும் பணத்துடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. 

விசாரணைக்குப் பிறகு, அவர்களிடம் போலீசார் ஒப்புதல் வாக்குமூலம் பெற்றனர். பின்னர் அவர்கள் அனைவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன் பிறகு, நீதிமன்ற உத்தரவுப் படி, அவர்கள் அனைவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். 

இதனிடையே, பல பெண்களை திருமணம் செய்துகொண்டு ஆண்கள் ஏமாற்றி வந்த காலம் போய், தற்போது பல ஆண்களைத் திருமணம் செய்துகொண்டு பெண் ஒருவர் ஏமாற்றும் காலம் வந்துவிட்டது, இணையத்தில் வைரலாகி வருகிறது.