தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியால் தடம் பதித்தவர் அருண் விஜய்.இவர் கடைசியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகியிருந்த மாஃபியா படத்தில் நடித்திருந்தார்.மாஃபியா படத்தின் ரிலீஸை தொடர்ந்து அருண்விஜய் சினம்,பாக்ஸர்,அக்னி சிறகுகள்,பார்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

இவர் அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார்.Drumsticks Productions இந்த படத்தை தயாரிக்கின்றனர்.அருண் விஜய் படங்களில் அதிக பட்ஜெட் கொண்டஇந்த படம் உருவாகிறது.இந்த படத்தின் ஹீரோயினாக ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கிறார்.

யோகி பாபு,குக் வித் கோமாளி புகழ்,அம்மு அபிராமி,கே ஜி எப் புகழ் கருடா ராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதம் பூஜையுடன் தொடங்கி பின்னர் கொரோனா காரணமாக தடைபட்டது.

கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.யானை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மாஸான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.