மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறாத நிலையில், விவசாயிகளின் போராட்டத்தை மீண்டும் பறைசாற்றும் விதமாக, நாளை நாடு முழுவதும் விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்தவுள்ளார்கள்.


'சக்கா ஜாம்' என்ற பெயரில் நாளை போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்கள். 'சக்கா ஜாம்'  என்றால் சாலை மறியல் போராட்டம் என அர்த்தம். நாளை 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாலை போராட்டம் நடத்த, பல்வேறு மாநில விவசாயிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.


இதனால் டெல்லியில் பலத்த பாதுகாப்பை  நடவடிக்கை எடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் , அமித் ஷா ஆலோசனை நடத்தியுள்ளார்.  சக்கா ஜாம் போராட்டத்தை முடிவு செய்து இருக்கும்,  மகா பஞ்சாயத்துகள் பல நூறு கிராமத்தினர் ஒன்றாய் திரள்கின்றனர். 


இதனால் போராட்டத்தில் அசம்பாவிதம் நடைப்பெறாமல் இருக்க, இருதரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது