சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை முடிந்து பெங்களூர் சிறையில் இருந்து  விடுதலையானார் இளவரசி..!11

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தோழி சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் திர்ர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ததை அடுத்து 4 பேரும் நிரபராதிகள் என கர்நாடக உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். 

இதனையடுத்து இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. 
இதனிடையே தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு காலமானார். இதனால் அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மீண்டும் உறுதிசெய்து தீர்ப்பளிக்கப்பட்டது .

இதனால் சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நான்காண்டு சிறை தண்டனை முடிவடையும் நிலையில் இருந்த சசிகலாவிற்கு திடீரென கொரோனா நோய்தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் பெங்களூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 
இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி  சசிகலா மருத்துவமனையில் இருந்தவாறு விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அவர் பெங்களூரில் உள்ள தனியார் பண்ணை பங்களாவில் தங்கி உள்ளார்.

சசிகலா பெங்களூரில் இருந்து வரும் 7ஆம் தேதி தமிழகம் வருவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர் 8 ஆம் தேதிதான் தமிழகம் வருவதாக அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.சசிகலா தமிழகம் வருவதைத் தொடர்ந்து தமிழக எல்லையில் இருந்தே உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் டி.டி.வி. த்இனகரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சசிகலாவின் உறவினரான இளவரசியின் தண்டனை காலமும் முடிவடைந்துள்ள நிலையில் இன்று  பெங்களூரு சிறையிலிருந்துஅவர் விடுதலை செய்யப்பட்டார்.
மேலும், சிறையில் உள்ள மற்றொரு உறவினரான சுதாகரனின் தண்டனை காலம் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில் அபராதத் தொகையாக 10 கோடி ரூபாய் இன்னமும் செலுத்தப்படாத காரணத்தினால் அவரது விடுதலையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.