கடந்த மார்ச் மாதம் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் ஜோதிராதித்ய சிந்தியா. அப்போது அவரது ஆதரவாளரான ஹர்ஷித் சிங்காயும் காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்தார். 


இந்நிலையில் மத்தியப் பிரதேசத இளைஞர் அணிக்குப் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதில்  இளைஞர் அணியின் பொதுச் செயலாளராக ஹர்ஷித் சிங்காய்  12 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்வு செய்யப்பட்டு இருப்பது, பெரும் பரபரப்பை கிளம்பி இருக்கிறது.

இதுகுறித்து ஹர்ஷித் சிங்காய் கூறும்போது, ’’ 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் தேர்தல் மனு கொடுத்து இருந்தேன். காங்கிரஸில் இருந்து விலகிய பின் எனது மனுவை ரத்து செய்யுமாறு மாநில காங்கிரஸிடம் கோரினேன். காங்கிரஸில் இருந்து மார்ச் மாதமே நான் விலகிவிட்டேன். இப்போது இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு நான் தேர்வு செய்யப்பட்டிருப்பது நகைப்புக்குரியது. இதேபோன்ற குழப்பத்தில் தான் காங்கிரஸ் தேர்தல் நடக்கிறது.“


இதுப்பற்றி காங்கிரஸ் தரப்பில், ‘’ ஹர்ஷித் சிங்காயின் தேர்தல் மனு ரத்துசெய்யப்பட்டு இருக்கிறது. அவர் பாஜகவில் சேரும் முன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறவில்லை” என்று கூறுகிறார்கள்.