“நான் போட்டோவில் பார்த்த மாப்பிள்ளை இவர் இல்லை” என்று கூறிவிட்டு, மணவறையிலிருந்து மணப்பெண் எழுந்து திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பீகார் மாநிலத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

பீகார் மாநிலம் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் இருக்கும் சனகஹியா மாய் என்கிற கோயிலில், ஒரு இளம் ஜோடிக்குத் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

அதன் படி, அந்த கோயிலில் அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் பல்வேறு கனவுகளுடன் திருமண ஆசையுடன் மணவறையில் அமர்ந்திருந்த மணப்பெண், மாப்பிள்ளையைப் பார்த்ததும் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார். 

மணக்கோலத்தில், மண மேடையில் அமர்ந்திருந்த அந்த பெண் தாலி கட்டும் நேரத்திற்கு சற்று முன்பாக, மாப்பிள்ளையைப் பார்த்துவிட்டு கடும் அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதனால், திடுக்கிட்டு மணமேடையில் இருந்து அந்த மணப்பெண் அப்படியே எழுந்துள்ளார்.

இதனைப் பார்த்த அனைவரும் கடும் அதிர்ச்சி. உடனடியாக, அந்த பெண்ணை அங்கிருந்தவர்கள் “எழக் கூடாது, அமருங்கள்” என்று கூறி உள்ளனர். ஆனால், அந்த மணப்பெண்ணோ, “இந்த மாப்பிள்ளைக்கு நான் ஓகே சொல்லவில்லை. நான் போட்டோவில் பார்த்த மாப்பிள்ளை வேறு. இவர் கிடையாது” என்று, கூறினார்.

இதனால், அந்த திருமண நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத மணமகளின் பெற்றோர்கள், தங்களது மகளை சமாதானம் செய்ய முயன்றனர்.

ஆனாலும், அதனை ஏற்க மறுத்த அந்த மணப்பெண், இந்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்ய மாட்டேன் என்று, பிடிவாதமாக இருந்து உள்ளார். அத்துடன், அந்த மணவறையில் இருந்து அந்த பெண் அப்படியே வெளியேறி உள்ளார். 

இதனால், மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, இரு வீட்டார் இடையே கடும் வாக்கு வாதம் நடந்தது. இதனையடுத்து, அந்த வாக்குவாதம் தகராறாக மாறிப்போனது,

அதன் தொடர்ச்சியாக, ஊர் மக்கள் தலையீட்டு இரு வீட்டாரையும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், அந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இதனையடுத்தே, வேறு வழியின்றி மணமகனும் அங்கிருந்து வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.