கோவா வந்த பிரெஞ்சு பெண்ணுக்கு மன நல ஆலோசகர் ஒருவர், போதை மருந்து கொடுத்த பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

டெல்லியைச் சேர்ந்த மன நல ஆலோசகர் ஒருவர், கடந்த ஜனவரி மாதம் முதல் கோவாவுக்கு குடிபெயர்ந்தார். தனது குடும்பத்துடன், குடிபெயர்ந்த அவர் அங்கு வசித்து வந்தார். 

அத்துடன், கோவுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் பல்வேறு சுற்றுலாப் பயணிகளுக்குப் பல விதமான மன நல ஆலோசனைகளும், மருத்துவ சிகிச்சை முறைகளும் அளித்து வந்தார்.

இப்படியான சூழ்நிலையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிசில் வசிக்கும் அந்நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், அந்நாட்டில் யோகா ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், அந்த இளம் யோகா டீச்சர், கோவாவுக்கு சுற்றுலா வந்திருந்தார். கோவாவுக்கு வந்த அந்த இளம் பெண், கோவாவில் பல்வேறு இடங்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்து உள்ளார்.

அப்போது, இந்த சுற்றுப் பயணத்தின் போது, அந்த இளம் பெண்ணிற்கு திடீரென்று முதுகு வலி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, குறிப்பிட்ட இந்த மன நல மருத்துவரை கடந்த வாரம் சந்தித்து சிக்சை பெற்றார்.

அப்போது, அந்த இளம் பெண்ணின் அழகில் மயங்கிய அந்த மன நல ஆலோசகர். அந்த பெண் மீது சபலப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த பெண்ணுக்கு ஒரு மருந்தைக் கொடுத்து “ இது முதுகு வலியைக் குணப்படுத்தும் மருந்து. இதனை இப்போதே குடியிங்கள்” என்று, கூறியிருக்கிறார். 

இதனால், மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில், அந்த இளம் பெண்ணும் அந்த மருந்தைக் குடித்திருக்கிறார்.

அந்த மருந்தை குடித்த அந்த பெண்ணுக்கு, அடுத்த சிறிது நேரத்திலேயே தலை சுற்றி சற்று மயக்கம் வந்துள்ளது. இதனால், அந்த பெண் அங்கேயே மயங்கி உள்ளார்.

முக்கியமாக மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை, அந்த பெண் மயக்க நிலையிலேயே அங்கேயே இருந்து உள்ளார். இதனையடுத்து, மாலை 6 மணிக்குப் பிறகு, அந்த பெண் கண் விழித்துப் பார்த்து, கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார். 

அப்போது, அந்த பெண்ணின் ஆடைகள் விலகி இருந்ததுடன், உடலில் பல இடங்களில் வலியும் எடுத்து உள்ளது.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், “அந்த மருத்துவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக” அந்த மருத்துவரிடமே வாக்குவாதம் செய்து உள்ளார். அதன் தொடர்ச்சியாக, அங்குள்ள காவல் நிலையத்தில், அந்த மன நல ஆலோசகர் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுச் சுமத்தி புகார் அளித்து உள்ளார்.

இது தொடர்பாகக் கோவா போலீசார் அந்த மன நல ஆலோசகர் மீது வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கோவா வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு, இந்திய மன நல ஆலோசகர் ஒருவர், போதை மருந்து கொடுத்த பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.