டியூஷனுக்கு சென்ற 15 வயது சிறுமியை, ட்யூசன் டீச்சரின் கணவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

குஜராத் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். 

தற்போது, கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சிறுமி தனது பெற்றோருடன் வீட்டில் இருந்து வந்தார்.

அத்துடன், அதே பகுதியில் செயல்பட்டு வந்த டியூஷனுக்கு அந்த சிறுமி சென்று வந்தார். அங்கு, டியூஷன் ஆசிரியராக ஒரு பெண் செயல்பட்டு வந்தார்.

மேலும், சம்மந்தப்பட்ட 9 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயதான சிறுமி, டியூஷன் படிக்க அந்த டீச்சரின் வீட்டுக்கு வரும்போதெல்லாம், அந்த டீச்சரின் கணவர் அந்த மாணவி மீது சபலப்பட்டு வந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படியாக, அந்த மாணவி ஆசைப்பட்ட டீச்சரின் கணவன், அந்த மாணவியை பார்த்து அடிக்கடி கண் அடிப்பது போல், ஜாடை கட்டி வந்திருக்கிறார் என்றும் தெரிகிறது. 

இந்த நிலையில், அந்த டீச்சர் வெளியே போகும் சமயம் பார்த்து எதார்த்தமாக அந்த மாணவி டியூஷனுக்கு அங்கு வந்துருக்கிறார். அப்போது, அங்கு வீட்டில் அந்த டீச்சரின் கணவர் மட்டும் இருந்திருக்கிறார்.

அந்த நேரம் பார்த்து, “உங்கள் டீச்சர் இப்ப வந்துருவாங்க.. நீ உள்ளே வந்து படி” என்று கூறி, அந்த மாணவியை வீட்டிற்குள் அனுமதித்து உள்ளார். அந்த மாணவி வீட்டிற்குள் வந்ததும், வீட்டின் கதவை உள் பக்கமாக பூட்டிவிட்டு அந்த மாணவியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

அத்துடன், அந்த மாணவி டியூஷன் படிக்க வந்து சென்ற பல தருணங்களில் வீட்டில் டீச்சர் இல்லாமல் இருப்பதும், இது போன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு, அந்த மாணவியை அந்த டீச்சரின் கணவன் பல முறை தொடர்ச்சியாக அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

இப்படியாக, டீச்சரின் கணவர் தொடர்ந்து அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வந்ததின் காரணமாக, அந்த மாணவி திடீரென்று கர்ப்பமாகி உள்ளார். 

பிறகு, அந்த சிறுமி வீட்டில் இருக்கும் போது, அவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வயிற்று வலி குறித்து, தனது தாயாரிடம் அந்த மாணவி கூறியிருக்கிறார். இதனால், பயந்துபோன சிறுமியின் தாயார், அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளார்.

அங்கு, அந்த மாணவியை பரிசோதித்த மருத்துவர், “உங்கள் மகள் கர்ப்பமா இருக்கிறார்” என்று, கூறியுள்ளனர். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், “என்ன நடந்தது? யார் காரணம்?” என்று, கேட்டிருக்கிறார். 

இதனால், வேறு வழியின்றி தனக்கு அன்றாடம் ட்யூசன் டீச்சரின் கணவனால் நேரும் பாலியல் அவலங்கள் குறித்து கூறி, கதறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ட்யூஷன் டீச்சரின் கணவனை அதிரடியாக கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.