இயக்குனர் ஷங்கர் பாலிவுட்டில் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து அந்நியன்  படத்தின் ரீமேக்கை இயக்கப் போவதாக சமீபத்தில் தெரிவித்தார். இதனால் இந்தியன் 2 திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா இயக்குனர் ஷங்கர் மீது வழக்கு பதிந்து உள்ளது. அந்த வழக்கில் இயக்குனர் ஷங்கர் இந்தியன்-2 திரைப்படத்தை முடிக்காமல் வேறு எந்த திரைப்படத்தையும் இயக்கக் கூடாது என தெரிவித்துள்ளது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்  இயக்குனர் ஷங்கர் தரப்பு வாதங்களை கேட்ட பிறகே முடிவு செய்ய முடியும் என தெரிவித்து இயக்குனர் ஷங்கரை பதிலளிக்கும்படி உத்தரவிட்டது.இது குறித்து பதில் அளித்த இயக்குனர் ஷங்கர் லைக்கா நிறுவனம் பல உண்மைகளை மறைத்து இந்த வழக்கை தொடர்ந்து உள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதில்,

 

“தில்ராஜ்” என்ற தயாரிப்பாளர் முதலில்  திரைப்படத்தை தயாரிப்பதாக இருந்ததை லைக்கா நிறுவனம் அவரை சமாதானப்படுத்தி இத்திரைப்படத்தை தயாரிக்க முன்வந்தது. Post-production காண பணிகள் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2018 மே மாதத்தில் படிப்பை துவங்க திட்டமிட்ட நிலையில் லைக்கா நிறுவனத்தின் தாமதத்தால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. 270 கோடி ரூபாய் பட்ஜெட் முடிவு செய்ததில் 250 கோடி ரூபாயில் படத்தை முடிக்குமாறு கேட்டுக்கொண்டு  தேவை இல்லாமல் படப்பிடிப்பை துவங்க தாமதம்  ஏற்பட்டது.” 

“ஒருவேளை தில்ராஜ் தயாரிப்பில் இத்திரைப்படத்தை உருவாக்கி இருந்தால் இந்நேரம் திரைப்படம் வெளியாகி இருக்கும் படத்தில் இருக்கும் காட்சிகளுக்கான அரங்கம் அமைப்பதில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்வது படப்பிடிப்பில் பணிபுரிபவர்களுக்கு ஊதியம் வழங்குவது என பல விஷயங்களில் தாமதம் செய்தது” 

“மேலும் ஆரம்பத்தில் கமல்ஹாசன் அவர்களுக்கு எடுத்துக்கொண்ட மேக்கப்பில் ஏற்பட்ட அலர்ஜியால், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக 3 பேர் உயிர் இழந்ததாலும் படப்பிடிப்பு தாமதமானது   இது தவிர கொரோனா ஊரடங்கு காரணத்தால் படப்பிடிப்பு நின்று மீண்டும் படப்பிடிப்பை துவங்குவதற்காக முயற்சி செய்தபோது லைக்கா நிறுவனம் சரியான ஒத்துழைப்பு தரவில்லை” .

என்று லைகா நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டி ஷங்கர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.மீண்டும் வருகிற ஜூன் மாதம் படப்பிடிப்பை துவங்க உள்ளதாக தெரிவித்துள்ள சங்கர் அதை மனதில் கொள்ளாமல் தனக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது  என தெரிவித்துள்ளார் எனவே இந்தியன் 2 திரைப்படம் தாமதம் ஆவதால் ஏற்படும் நஷ்டங்களுக்கு சங்கர் பொறுப்பில்லை எனவும் தன் மீது தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்து தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளார். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரணையை ஜூன் 4-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.