காதலியின் அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்ட காதலனை போலீசார் கைது செய்தனர்.

கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது பள்ளித் தோழியை எதார்த்தமாக அவர் சந்தித்துள்ளார். அப்போது, இருவரும் தங்களது செல்போன் எண்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

 Girl sexual photos uploaded in Facebook by boy

குறிப்பிட்ட அந்த பெண், கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்துக்கொண்டே, சூலூரில் உள்ள தனியார் மில்லில் பகுதி நேரமாக பணியாற்றி வந்துள்ளார். 

இதனிடையே, இருவரும் அடிக்கடி சொல்போனில் பேசிக்கொண்ட நிலையில், இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து, காதலன் கேட்டுக்கொண்டதற்கு இனங்க, காதலி தன்னுடைய அந்தரங்க புகைப்படத்தையும், வீடியோவையும் காதலனுக்கு ஆனுப்பி உள்ளார்.

 Girl sexual photos uploaded in Facebook by boy

இதனையடுத்து, காதலனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த காதலன், காதலியின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோவை தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஏமாற்றுதல், கொலை மிரட்டல், தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அஜித்குமாரை கைது தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, காதல் தோல்வியால் காதலியின் அந்தரங்க புகைப்படத்தைக் காதலன் வெளியிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.