மனைவியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நண்பனை, மதுவில் ஆசிட் கலந்து கொடுத்து நண்பனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கரூர் பகுதியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கரூர் காந்தி கிராமம் வடக்குப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான தர்மா என்கிற கிருஷ்ணமூர்த்தி, தனது மனைவி ஷாலினி உடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு,  6 மாத கைக்குழந்தையும் உள்ளது.

தர்மா என்கிற கிருஷ்ணமூர்த்திக்கு, அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்ற கூட்டாளி இருந்து உள்ளார்.

இப்படியான சூழ்நிலையில், நேற்று முன் தினம் 10 ஆம் தேதி அன்று, மோகன் தனது நண்பர்களுடன் மது அருந்துவதற்காக அங்குள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று உள்ளார். 

பின்னர், மது அருந்தி விட்டு காட்டுப் பகுதியில் இருந்து அவர்கள் ஊருக்குள் திரும்பி உள்ளனர். அப்போது, மது அருந்திய மோகன் மற்றும் அவரது கூட்டாளி சசிகுமாருக்கு வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து, அவர்கள் இருவரையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். ஆனாலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி மோகன் உயிரிழந்து உள்ளார்.

இது குறித்து, அங்குள்ள பசுபதிபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

அதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ் உத்தரவின் பேரில், உயிரிழந்த மோகம் குடித்த மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு பரிசோதனைக்காகத் தடயவியல் துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த சோதனையில் உயிரிழந்த மோகன் குடித்த மது பாட்டில்களில், நகை தொழிலுக்குப் பயன்படுத்தக் கூடிய திராவகம் கலந்திருப்பது தெரிய வந்தது. 

அதன் தொடர்ச்சியாக, மோகனின் நண்பர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். 

இந்த விசாரணையில், உயிரிழந்த மோகனின் நண்பரான தர்மா என்கிற கிருஷ்ணமூர்த்தி, மோகன் குடித்த மதுவில் திராவகத்தைக் கலந்து, மோகனுக்கு கொடுத்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். 

மேலும், தர்மா என்கிற கிருஷ்ணமூர்த்தியின் மனைவியான ஷாலினியிடம், மோகன் பல முறை தவறாக நடக்க முயன்று உள்ளார். 

இது தொடர்பாக ஒவ்வொரு முறையும் ஷாலினி, தனது கணவனிடம் அழுதுகொண்டே கூறிய நிலையில், நண்பன் என்கிற முறையில், அவரும் மோகனை பல முறை எச்சரித்து இருக்கிறார். ஆனால், இதை எதையும் பெரிதாக கண்டுகொள்ளாத மோகன், தொடர்ந்து ஷாலியிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டு வந்ததார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த ஷாலினியின் கணவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து மோகனை சமாதானம் பேசுவதாகக் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் 
சென்று உள்ளார். அங்கு பேச்சுக்கொடுத்தப்படியே, மதுவில் திராவகம் கலந்து கொடுத்திருக்கிறார். இதனைக் குடித்த பிறகு, அவர் உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், தீவிர  விசாரணைக்குப் பிறகு, சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.