31 வயது மகள் நதியாவின் தகாத உறவால், அவர் செல்போனில் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால், ஆத்திரமடைந்த 47 வயது தாயார், மகளின் தலையில் கிரைண்டர் கல்லைப் போட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை காரமடை பகுதியில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோவை காரமடை அடுத்து உள்ள கணுவாய்ப்பாளையத்தை சேர்ந்த 47 வயதான நாகமணி என்ற பெண், கணவர் உயிரிழந்த நிலையில், தனது மகள் நதியாவுடன் வசித்து வந்தார்.

நதியாவிற்கு தற்போது 31 வயது ஆகும் நிலையில், 14 ஆண்டுகளுக்கு முன்பு சரவண குமார் என்பவருடன் நதியாவிற்கு முறைப்படி திருமணம் ஆகி உள்ளது.

திருமணத்திற்குப் பிறகு மிகவும் கிழ்சியாக வாழ்ந்து வந்த இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். 

ஆனால், அதன் பிறகு கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்தது. இப்படியான நிலையில் தான், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, நடந்த ஒரு சாலை விபத்தில் கணவன் சரவண குமார் திடீரென்று உயிரிழந்தார். 

இதனால், 31 வயதான மனைவி நதியா, தனது இரு குழந்தைகளுடன் தன்னுடைய தாயார் வீட்டிற்கு வந்து, அங்கு வசித்து வந்தார். 

அம்மா வீட்டில் இருந்த கணவனை இழந்த 31 வயதான நதியா, அடிக்கடி செல்போனில் பல ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால், அவர் தனது குழந்தைகளை சரிவர கவனிக்காமல் இருந்து உள்ளார். இதனை நதியாவின் அம்மா நாகமணி கவனித்து உள்ளார். இது குறித்து, தனது மகள் நதியாவை அவர் கண்டித்து உள்ளார். ஆனால், தாயாரின் பேச்சையும் மீறி, நதியா பல ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து பேசி வந்து உள்ளார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த நதியாவின் தாயார், “உன் குழந்தைகளை தானே வளர்க்கிறேன்” என்று கூறிவிட்டு, தனது மகள் நதியாவை வீட்டில் இருந்து விரட்டி அடித்து உள்ளார்.

இதனைப் பார்த்து கடும் ஆத்திரமடைந்த தாயார் நாகமணி, மீண்டும் மீண்டும் தனது மகளை எச்சரித்தும், அவர் எதையுமே கேட்க வில்லை. இதனால், தனது மகள் நதியா மீது கடும் ஆத்திரமடைந்த தாயார் நாகமணி, நேற்றிரவு தனது மகள் நதியா உடன் சண்டை போட்டு உள்ளார். 

பின்னர், சிறுது நேரத்தில், அனைவரும் தூங்க சென்று உள்ளனர். அப்போது, நதியா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து உள்ளார். அப்போது, நள்ளிரவு ஒரு மணி அளவில், தாயார் நாகமணி எழுந்து, வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லை தூக்கி, நன்றாகத் தூக்கிக்கொண்டிருந்த நதியாவின் தலையில் போட்டு, அவரை படுகொலை செய்து உள்ளார்.

இது குறித்து, அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் படி, காரமடை போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

அத்துடன், மகளை கொலை செய்த தாயார் நாகமணியை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது, “கள்ளக் காதலை என் மகள் கைவிட மறுத்த காரணத்தால், என் மகளை நானே கொலை செய்தேன்” என்று, அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார். இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். 

இதனிடையே, கள்ளக் காதல் வைத்திருந்த மகளை, தாயே கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.