அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், 2-வது முறையாக போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபர் பதவிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க தேர்தலுக்கான அதிபர் வேட்பாளராக போட்டியிட ஜோ பிடனை, ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ஜோ பிடன் தனது டுவிட்டரில், “அமெரிக்காவின் ஜனாதிபதிக்கான ஜனநாயகக் கட்சியின் பரிந்துரையை ஏற்றுக்கொள்வது எனது வாழ்க்கைக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த அறிவிப்பு தமக்கு வாழ்நாள் கௌரவம் என நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் ஜோ பிடன்.

முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரை அதிகாரபூர்வமாக தேர்வு செய்யும் கட்சி மாநாடு, ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் ஜோ பிடன் அதிகாரபூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த மாநாட்டில் பேசிய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி, மிச்சேல் ஒபாமா, டிரம்பை மிகக் கடுமையாக விமர்சித்தார். அவர் ஒரு  மிகத் தவறான அதிபர் என்றார். தலைமை பண்பு, நிலையான போக்குகள் அற்றவர் என்றும், குழப்பங்களை விளைப்பவர் என்றும் சாடினார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 அதிபர் வேட்பாளராக ஜோ பிடனை ஜனநாயகக் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தியை பிடன் டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். 

கொரோனா நோய்த்தொற்று பரவல் அபாயம் காரணமாக, இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளா்களைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெறவிருந்த வாக்கெடுப்புகள், இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஜனநாயகக் கட்சி அதிபா் வேட்பாளருக்கான தோ்வில் ஜோ பிடன் வெற்றி பெற்றாா். அவருக்கு ஆதரவாக 79.5 சதவீத வாக்குகள் பதிவாகின. 

இதையடுத்து, நவம்பா் மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிபா் தோ்தலில், தற்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பை எதிா்த்து ஜனநாயகக் கட்சி சாா்பில் ஜோ பிடன் போட்டியிடுவது ஏற்கெனவே உறுதியாகியிருந்தது.

ஜனநாயகக் கட்சி அதிபா் வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக லூசியானாவில் நடைபெற்ற போட்டியிலும் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், விஸ்கான்ஸன் மாகாணத்தில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில், அதிபா் வேட்பாளராக ஜோ பிடன் அதிகாரப்பூா்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிடனுக்கு 3,558 பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.