“18 வயது குறைவான பெண்ணுடன் பாலியல் செயல் கூடாது” என்று குறிப்பிட்ட நீதிமன்றம், காதல் திருமணம் செய்த 17 வயது சிறுமியை காதலனின் தாயுடன் தங்க அனுமதி வழங்கி உள்ள சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. 

இந்தியாவில் முன்பை விட தற்போது காதல் திருமணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில், சாதி மாறிய காதல் திருமணங்கள் ஒரு மக்கம் நடந்தாலும், மற்றொரு பக்கம் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாகாத நிலையில் நடைபெறும் குழந்தை திருமணங்களும் அவ்வப்போது நடைபெற்றுத் தான் வருகிறது.

இந்த திருமணங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள நீதிமன்றம், “சிறுமிகள் மேஜராவதற்கு முன்பே தனக்கு நிர்ணயிக்கப்பட்ட வயதை அடைவதற்கு முன்பே உடலியல் மற்றும் உளவியல் முதிர்ச்சியை அடைகிறார்கள்” என்று, ஹரியானா மற்றும் பஞ்சாப் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

குறிப்பாக, இது தொடர்பாகக் கருத்து தெரிவித்து உள்ள நீதிபதி சஞ்சய் குமார், “பெண் குழந்தைகள் தங்களின் சமவயது சிறுவர்களை விட முதிர்ச்சி உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது விஞ்ஞான ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட உண்மை” என்று குறிப்பிட்டார்.

“அதனால் தான், பெண்களுக்கான மேஜர் வயது 18 வயது ஆகவும், ஆண்களுக்கு 21 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

அதாவது, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்து உள்ளார். இதனால், காதலர்கள் இருவரும் அந்த பகுதிகளில் சுற்றித் திருந்து வந்தனர்.

இந்த காவல் விசயம் எப்படியோ, அந்த 17 வயது சிறுமியின் வீட்டிற்குத் தெரிய வந்துள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் தன் மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர். அத்துடன், தன் மகளை அவரது பெற்றோர் மிரட்டியதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து, வீட்டை விட்டு வெளியேறிய அந்த 17 வயது சிறுமி, தன்னுடைய காதலனை அங்குள்ள ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் விசயம் பற்றித் தெரிந்துகொண்ட சிறுமியின் பெற்றோர், தன் மகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், பயந்து போன அந்த சிறுமி, “எனக்கும் என் காதல் கணவனுக்கும் பாதுகாப்பு தாருங்கள்” என்று ஹரியானா நீதிமன்றத்தை நாடி உள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “சிறுமியின் உயிர் பாதுகாப்பு கருதி, அந்த சிறுமி மேஜராகும் வயது வரும் வரை, அந்த சிறுமியின் காதல் கணவனின் தயாருடன் தங்க வேண்டும்” என்று, உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், இது தொடர்பாக பேசிய நீதிபதி, “மனு தாக்கல் செய்துள்ள சிறுமியின் வேண்டுகோளைப் பரிசீலிக்கும் போது, குழந்தை திருமணங்கள் தொடர்பாக நமது சட்டங்களில் தெளிவு இல்லை” என்று குறிப்பிட்டார்.

அத்துடன், “மேஜராகாத வயதினருக்கு இடையிலான இந்து திருமணச் சட்டத்தில் கூட தெளிவு இல்லை என்றும், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம் 2012 ன் படி, 18 வயதுக்குக் குறைவான ஒரு பெண்ணுடன் எந்த ஒரு பாலியல் செயலையும் அல்லது உடலுறவையும் ஒரு குற்றமாக சட்டம் பார்க்கிறது” என்றும் கூறினார்.

குறிப்பாக, “அப்பெண், சம்மந்தப்பட்டவரின் மனைவியாக இருந்தாலும் அது குற்றமே என்றும், விதி விலக்கு 2 முதல் பிரீவு 375 ஐபிசி 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் உடலுறவு மற்றும் பாலியல் செயல்கள் வன்கொடுமை அல்ல என்று கூறுகிறது என்றும், இது போல பல முரண்கள் உள்ளது” என்றும், நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

முக்கியமாக, “மனு தாக்கல் செய்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக நாம் அவரது பெற்றோரிடம் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக ஒப்படைக்க வேண்டும் அல்லது 18 வயதை அந்த சிறுமி எட்டும் வரை அவரை பாதுகாப்பு இல்லத்தில் வைக்க வேண்டும்” என்றும், நீதிமன்றம் கூற முடியாது.

இதனால், அந்த சிறுமி 18 வயது எட்டும் வரை காவல் துறை கண்காணிப்புடன், அந்த சிறுமியின் காதல் கணவனின் தாயாருடன் தங்கலாம். இதனை மாவட்ட குழந்தைகள் நலக் குழு கண்காணிக்க வேண்டும்” என்றும், நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.