இந்திய பண்பாட்டின் தோற்றம் பற்றிய ஆய்வு.. “குறிப்பிட்ட ஒரே சாதியினர் 16 பேரை கொண்டு புராணங்களையே வரலாறு என எழுத நினைப்பதா?” சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி

இந்திய பண்பாட்டின் தோற்றம் பற்றிய ஆய்வு.. “குறிப்பிட்ட ஒரே சாதியினர் 16 பேரை கொண்டு புராணங்களையே வரலாறு என எழுத நினைப்பதா?” சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி - Daily news

இந்திய பண்பாட்டின் தோற்றம் பற்றிய ஆய்வில் “குறிப்பிட்ட ஒரே சாதியில் சங்கத் தலைவர் உட்பட 16 பேரை கொண்டு புராணங்களையே.. வரலாறு என எழுத நினைப்பதா?” என்று, நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்திய பண்பாடும், தமிழக பண்பாட்டு கலாச்சாரங்களும் நீண்ட காலமாகவே திருத்தி எழுதப்பட்டு வருவதாக நாம் பல்வேறு புத்தகங்களில் படித்திருப்போம், திரைப்படங்களில் கூட அது சார்ந்த கருத்துக்களை பார்த்ததுண்டு. ஆனால், தொழினுட்பம் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ள தற்போதைய காலகட்டத்தில் கூட, பண்டைய பண்பாட்டு கலாச்சாரங்கள் குறிப்பிட்ட ஒரே ஒரு சமூகத்தினருக்கு மட்டும் ஆதரவாக மாற்றியும், திருத்தியும், மறைத்தும், புதைத்தும், திணித்தும், தீர்மானித்தும் எழுதப்படுகிறதோ என்ற சந்தேகத்தைக் கிளப்பி இருக்கிறது நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி இருக்கக்கூடிய இந்த கேள்வி.

நாடாளுமன்றத்தில் தற்போது பல்வேறு முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றைய தினம் அவை கூடியதும், பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது, மக்களவையில் நேரமில்லா நேரத்தில் (ஜீரோ ஹவர்) என்ற நேரத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசினார். அது தான், இந்தியா முழுவதும் தற்போது புயலைக் கிளப்பி இருக்கிறது.

அதாவது நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியது என்னவென்றால், “12 ஆயிரம் ஆண்டுக்கால இந்திய பண்பாட்டின் தோற்றம், பரிமாணத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசால் 16 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பன்மைத்தன்மை இல்லை” என்பதைச் சுட்டிக்காட்டி உள்ளார்.

“தென்னிந்தியரோ, வட கிழக்கு இந்தியரோ, சிறுபான்மையினரோ, தலித்தோ, பெண்ணோ இந்த குழுவில் இடம் பெறவில்லை. இந்து உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே குறிப்பிட்ட இந்த குழுவில் திட்டமிட்டே இடம் பெற்று உள்ளனர்” என்பதையும் அவர் மேற்கோள்காட்டி உள்ளார்.

“மத்திய அரசு செம்மொழி என்று அங்கீகரித்த தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளின் ஆய்வாளர்கள் யாருக்கும் இதில் இடம் கிடைக்கவில்லை. அது ஏன்?

ஆனால், குறிப்பிட்ட ஒரு சாதி சங்கத் தலைவருக்கு இந்த 16 பேர் கொண்ட குழுவில் இடமிருக்கிறது. அப்படி என்றால், அந்த இந்திய பண்பாட்டின் தோற்றம், பரிமாணத்தை ஆய்வு செய்ய இந்த குழு அமைக்கப்பட்டிருப்பதின் நோக்கம் என்ன? 

யாருக்கு ஆதரவாகச் செயல்படக் குறிப்பிட்ட ஒரே சாதியினரைக் கொண்டு இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது?

இந்த குழுவில் ஒரு குறிப்பிட்ட சாதி சங்கத் தலைவர் எப்படி இடம் பெற்றார்? 

அப்படி என்றால், விந்திய மலைக்குக் கீழே இந்தியா இல்லையா? வேத நாகரிகத்தினைத் தவிர வேறு நாகரிகம் இல்லையா? 

சமஸ்கிருதத்தைத் தவிர ஆதி மொழி இங்கு இல்லையா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை அவர் எழுப்பி உள்ளார்.

குறிப்பாக, “ஜான் மார்ஷல், சுனிதி குமார் சட்டர்ஜி தொடங்கி ஐராவதம் மகாதேவன், டோனி ஜோசப், ஆர்.பாலகிருஷ்ணன் வரையிலான ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகளை எல்லாம் நிராகரித்து புராணங்களையே வரலாறு என நிறுவுவதற்கே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது” என்பதையும் நாடாளுமன்றத்தில் அவர் பகிரங்கமாகவே சுட்டிக்காட்டி உள்ளார்.

“எப்படி மண்ணுக்குள் இருக்கும் வேர்களை விமானங்களில் பறந்துகொண்டு பார்க்க முடியாதோ, அதே போல இந்த மண்ணின் பண்பாட்டினை சாதியத்தின் பீடங்களில் உட்கார்ந்திருப்பவர்களால் ஒரு போதும் எழுத முடியாது. இதனால், இந்தக் குழுவைக் கலைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று, வலியுறுத்தினார். சு.வெங்கடேசன் எம்.பி. எழுப்பிய இந்த அதிரடியான கேள்விகளால், சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு முறை திகைத்துப் போனார்கள். ஆச்சரியமாகப் பார்த்தார்கள். 
 
அதன் தொடர்ச்சியாக, இது தொடர்பா சு.வெங்கடேசன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு, கலாச்சாரத் துறை அமைச்சர் பதில் அளித்துப் பேசினார். 

எனினும், இந்தியப் பண்பாட்டின் தோற்றம் பற்றிய ஆய்வில் “குறிப்பிட்ட ஒரே சாதியில் சங்கத் தலைவர் உட்பட 16 பேரை கொண்டு புராணங்களையே.. வரலாறு என எழுத நினைப்பதா?” என்று, நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. எழுப்பிய கேள்வி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால், மத்திய அரசு மீதும், மத்திய அரசு அமைத்து உள்ள இந்த குழுவின் மீதும் பலரும் அதிருப்தியில் உள்ளனர். 

Leave a Comment