சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் ! - விஜயகாந்த்

சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் ! - விஜயகாந்த் - Daily news

சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் இரண்டு முறை உயர்த்தப்பட்டதற்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து, சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். 


சிலிண்டர் விலை உயர்வை குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் , “ சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஒன்றாம் தேதி முதல் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 660 ரூபாயாக அதிகரித்தது, மீண்டும் 50 ரூபாய் அதிகரித்து 710 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சிலிண்டர் விலை 15 நாட்களில் 100 ரூபாய் அதிகரித்திருப்பது சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கொரோனா ஊரடங்கால் டீக்கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் தொழிற்சாலைகளும் மூடப்பட்டதால் வியாபாரிகளும், ஏழை மக்களும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், பெட்ரோல் டீசல் விலையை போல சிலிண்டர் விலையையும் உயர்த்தி வருகிறது மத்திய அரசு. சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.” என்று தெரிவித்து இருக்கிறார்.  
 

Leave a Comment