தமிழகத்தில் LKG - UKG மாணவர்களுக்கு விடப்பட்ட விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத்தொடங்கி உள்ள நிலையில், இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. 

coronavirus #CoronaVirusUpdates #Coronavirus

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 85 ஆக அதிகரித்து உள்ள நிலையில், பக்கத்து மாநிலமான கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனிடையே, கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் LKG - UKG படிக்கும் மாணவர்களுக்கு, வரும் 16 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை, தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. .

coronavirus #CoronaVirusUpdates #Coronavirus

அதேபோல், கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் LKG முதல், 5 ஆம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா வைரஸ் காரணமாகத் தமிழகம் முழுவதும் LKG - UKG படிக்கும் மாணவர்களுக்கு நேற்று இரவு அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறை, தற்போது நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 5 ஆம் வகுப்பு வரை அறிவிக்கப்பட்ட விடுமுறையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

நேற்று அறிவித்த விடுமுறை, இன்று திடீரென்று நிறுத்திப்பட்டதற்கான காரணங்கள் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கொரோனா அச்சம் காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் 24 விமானங்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.