கொரோனா வைரசால் இந்தியாவில் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.. 
 
- சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், இன்று கிட்டத்தட்ட இந்தியா உட்பட 97 உலக நாடுகளுக்குப் பரவி உள்ளன. 

- உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 

- இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளது.

coronavirus affected India symptoms treatment

- இதில், 64 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவைச் சேர்ந்த ஒருவர் என 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

- இந்தியாவில் அதிக பட்சமாக ராஜஸ்தான் மற்றும் கேரளாவில் தலா 17 பேரும், மகாராஷ்டிராவில் 16 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- உத்தரப்பிரதேசத்தில் 11 பேரும், கர்நாடகாவில் 4 பேரும், டெல்லியில் 6 பேரும், லடாக்கில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

coronavirus affected India symptoms treatment

- ஆந்திராவில் 4 பேரும், தெலங்கானா, காஷ்மீர் மற்றும் பஞ்சாப்பில் தலா ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

- கொரோனாவால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. கர்நாடகாவில் உயிரிழந்த 76 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது.

- கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்சநீதிமன்றத்தில் முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் மட்டுமே செயல்படும் என்று  உச்சநீதிமன்றம் தற்போது தெரிவித்துள்ளது. 

coronavirus affected India symptoms treatment

- கொரோனா வைரஸ் தாக்கத்தால் சத்தீஸ்கரில் உள்ள பள்ளிகளுக்கு, வரும் 31 ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

- கொரோனா வைரஸ் பீதியால், மத்தியப் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளுக்கு, கால வரையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

- முன்னதாக டெல்லி மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

- டெல்லி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் திரையரங்குள் மற்றும் மால்கள் மூடவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

coronavirus affected India symptoms treatment

-  கொரோனா வைரசால், கர்நாடகாவில் பொது இடங்களில் கூட கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

- கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே லக்னோ மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த ஒருநாள் போட்டிகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- கொரோனா தாக்கம் எதிரொலியாக இந்தாண்டுக்கான ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி தொடரின் தேதி மார்ச் 29 ஆம் தேதியிலிருந்து, ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

- ஐ.பி.எல். தொடருக்காகச் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மேற்கொண்ட பயிற்சி இன்றுடன் நிறைவுப்பெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

coronavirus affected India symptoms treatment

- கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சம் காரணமாக ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதிப் போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- கொரோனா அச்சம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்ததால், வர்த்தகம் நிறுத்தப்பட்டது. சென்செக்ஸ் வீழ்ச்சியால் 11 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

coronavirus affected India symptoms treatment

- கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் பயணம், சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்துத்துறை அடுத்த பத்து நாட்களில், சுமார் 8500 கோடி ரூபாய் இழப்புகளைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

- கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏப்ரல் மாதத்திற்குள் உற்பத்தி மதிப்பில் சுமார் 6000 கோடி ரூபாய் வரை இந்திய மொபைல் போன் உற்பத்தியாளர்கள் பாதிப்பைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

- கொரோனா அச்சத்தால், ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

- கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக, பத்மநாபபுரம் அரண்மனை மூடப்பட்டது.

- கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கோயிலுக்கு வருவதைத் தவிர்க்குமாறு திருப்பதி ஏழுமலையான் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழனி முருகன் கோயில் உள்ளிட்ட சில கோயில் நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

- கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எவரெஸ்ட் சிகர பயணத்திற்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.

- ஜப்பானின் நாட்டின் டோக்கியோவில் ஜூலை 24-ல் தொடங்கும் ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்கு ஒத்திவைக்கலாம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் யோசனை கூறி உள்ளார்.

- கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.