சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராக இருந்து வருபவர் சித்து என்கிற VJ சித்ரா.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிவிட்டார்.ஒரு தொகுப்பாளராக மட்டும் இல்லமால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய நடன திறமைகளையும் நிரூபித்திருந்தார்.

இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி,சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட முன்னணி தொடர்களிலும் நடித்துவந்தார்.தற்போது TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.இது தவிர ஹீரோயினாக கால்ஸ் என்ற படத்தில் கால் சென்டரில் வேலைபார்க்கும் பெண்ணாக நடித்து வருகிறார்.

கொரோனா பாதிப்பு காரணமாக ஷூட்டிங்குகள் நிறுத்தப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது ,புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.பிரபலங்கள் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவவிட்டு வருகின்றனர்.சித்ரா தனது ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பார்.சமீபத்தில் அவருடைய ரசிகையின் பிறந்தநாள் கொண்டாடி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு எப்போதும் பதிலளிப்பார்.தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் அவ்வப்போது லைவ்வில் வந்தும் ரசிகர்களை சந்தித்து வந்தார் சித்ரா.தன்னுடைய ரசிகர்களுடன் எப்போதும் நெருக்கமாக இருப்பார் சித்ரா.

சமீபத்தில் ரசிகை ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு , அவரது வீட்டிற்கே நேரடியாக சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சித்ரா.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சித்ராவின் செயலை பலரும் பாராட்டி வந்தனர்.இவர் இன்ஸ்டாகிராமில் போடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு எப்போதும் லைக்குகள் அள்ளும்.

சித்துவிற்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி நிச்சயதார்த்தம் முடிந்தது.இந்த வருட இறுதிக்குள் திருமணம் முடிந்துவிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் தனது நிச்சயதார்த்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சித்து.இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இவரது நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு, செம வைரலாகி வந்தன.ஜோடிப்பொருத்தம் சூப்பராக உள்ளது என்று ரசிகர்கள் சித்துவிற்கும் அவரது வருங்கால கணவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.அதனை தொடர்ந்து சில நடன வீடியோக்களையும் பகிர்ந்து வந்தார் சித்து.இதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.சமீபத்தில் முடிந்த விஜய் டிவியின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் சித்து மற்றும் அவரது வருங்கால கணவர் இருவருக்கும் நலங்கு விழா நடத்தி வைத்தனர்.

தற்போது சித்து மற்றும் ஹேமந்த் இருவரின் நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்ட புதிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.செம கியூட்டான இந்த வீடியோ ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

View this post on Instagram

Just a day before the big day, @chithuvj contacted us and wanted us to plan something amazing for her fiancé on their special day! We spared no effort to make sure that he felt extraordinarily special. We planned this flashmob alongwith the live art surprise for him! Balloons of love flew up in the air as they opened the beginning of their new happy life box along with vertical posters. He was so happy that his eyes did enough talking❤️ The smile on their faces and the joy in the air with our surprises surely made the evening nothing less than a big celebration! #surprisemachi #happinesspartner #kuttystory #surpriseplannerchennai #surpriseplanners #chennaidiaries #surpriseinchennai #chithu #vijaytvserial #starvijay #missyoumullai #mullai #chithuvj_army #chithuvj #onlyforchithu #mullaimadness #tamilserialactress #fansurprise #vjchithu #vijaytelevision #mullaiaddict #pandianstores #pandianstoresserial #kathirmullai #engagement #engagementsurprise @only_for_mullai @devathai_mullaiaddict @chithuvj_thozhi @mullai_visiri @mullai_loveable

A post shared by Surprise Machi (@surprise_machi) on