தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி தனுஷின் சினிமா கேரியரில் முதல் நூறு கோடி வசூல் செய்த படமாக மாறியது. கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை இயக்கியிருந்தார். 

மேலும் இந்த படம் தற்போது தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தமிழில் அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு தான் தெலுங்கிலும் நாரப்பா என்ற பெயரில் தயாரித்து வருகிறார்.

நாரப்பா படத்தில் வெங்கடேஷ் நடிக்கும் கதாபாத்திரத்தின் கெட்டப் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. வயதான தோற்றத்திற்கு மிகவும் பக்காவாக பொருந்தியிருந்த அந்த புகைப்படத்தை பார்த்ததிலிருந்தே படத்தின் எதிர்பார்ப்பு அதிகமானது.

ஆனால் அசுரன் படத்தில் தனுஷ் இளவயது கேரக்டரில் நடித்தது போல வெங்கடேஷ் ட்ரை பண்ணியுள்ள புகைப்படம் கடைசியாக இணையத்தில் வெளியானது. இதில் பார்ப்பதற்கு வெங்கடேஷ் இளமை தோற்றத்தில் இல்லை என்பதே இணையவாசிகள் ஏங்கினர். தனுஷின் உடல்வாகுக்கு அந்த இளமை கதாபாத்திரம் பக்காவாக பொருந்தியிருந்தது. ஆனால் வெங்கடேஷ் அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தவில்லை என்று பதிவு செய்திருந்தனர். 

இந்நிலையில் உகாதி சிறப்பாக இன்று நாரப்பா படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மஞ்சு வாரியார் ரோலில் பிரியாமணி நடித்துள்ளார். அவரது நடிப்பும் பெரிதளவில் பேசப்படும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.