குக் வித் கோமாளி 2ல் போட்டியாளராக கலந்துகொண்டவர் பாபா பாஸ்கர். பிரபல டான்ஸ் மாஸ்டரான அவர் இதற்கு முன்பு தனுஷின் பல திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் அவர் இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றார். 

மற்ற போட்டியாளர்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதால் இறுதி போட்டி செம கடினமான ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை இறுதி போட்டி ஒளிப்பரப்பாக இருக்கும் நிலையில் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. போட்டியாளர்களான அஸ்வின், கனி, ஷகீலா, பவித்ரா ஆகியோருடன் தான் பாபா பாஸ்கர் மோதினார். 

சமீபத்தில் பாபா பாஸ்கர் பற்றிய ஒரு தகவல் அதிகம் வைரலானது. தனுஷ் உடன் 8ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர் என்பது தான் அது. இந்த தகவல் இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டதே என அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர். தனுஷ் தான் தனக்கு அதிகம் வாய்ப்புகளை கொடுத்தவர் என பாபா பாஸ்கர் பல்வேறு பேட்டிகளில் வெளிப்படையாக கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

குக் இது கோமாளியில் பங்கேற்கும் முன்பு பாபா பாஸ்கர் தெலுங்கு பிக் பாசில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் அவர் இறுதி வரை இருந்து ரன்னர் அப் ஆக தான் வெளியில் வந்தார். பிக்பாஸ் போனதால் தான் தனுஷின் சில ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைக்கும் வாய்ப்பை இழந்தேன் என்றும் ஒரு பேட்டியில் அவர் கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுறுசுறுப்பாக இருக்கும் பாபா பாஸ்கர் மாஸ்டர், குணத்தில் குழந்தை என்றே கூறலாம். ஷூட்டிங் ஸ்பாட்டில் குரங்குடன் விளையாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குரங்கிற்கு தண்ணீர் தந்து, அதன் முன் மைக்கை நீட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RS Baskar (@iambababaskar)